நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் டெங்கு நோயாளிகள் 600 பேர் : கட்டில்கள் 200

(நீர்­கொ­ழும்பு நிருபர்)  


நீர்­கொ­ழும்பு மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் டெங்கு நோயா­ளிகள் 600 பேருக்கு மேல் தற்­போது சிகிச்சைப் பெற்று வரு­வ­தா­கவும் இட­வ­ச­தி­யின்மை,   கட்­டில்­களின் எண்­ணிக்கை போதாமை  கார­ண­மாக நோயா­ளிகள் நிலத்தில் இருப்­ப­தா­கவும் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் நிலந்தி பத்­தி­ரன  தெரி­வித்தார்.

dengue

இது தொடர்­பாக வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் மேலும் தெரி­வித்­த­தா­வது, கடந்த வருடம் 1084 டெங்கு நோயா­ளிகள் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இந்த வருடம்  நேற்று முன்­தினம் வரை 3790 டெங்கு நோயா­ளிகள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

இவர்­களில் 40 வீத­மா­ன­வர்கள் நீர்­கொ­ழும்பைச் சேர்ந்­த­வர்கள். மூன்று வார்­டு­களில் சிறுவர், பெண்கள் மற்றும் ஆண்கள் தங்­கி­யி­ருந்து சிகிச்சைப் பெற்று வரு­கின்­ற­னர். 200 கட்­டில்­களே உள்­ளன.

 

ஆயினும் தற்­போது 600 இற்கும் மேற்­பட்டோர் சிகிச்சைப் பெற்று வரு­கின்­றனர். தாதி­யர்­களின் பற்­றாக்­கு­றை, வைத்­தி­யர்­களின் பற்­றாக்­குறை உள்­ளது. ஏனைய வார்­டு­க­ளிலும் டெங்கு நோயா­ளி­களை அனு­ம­திக்க திட்­ட­மிட்­டுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.


இதே­வேளை, இட­வ­ச­தி­யின்மை,  கட்­டில்கள் இன்மை கார­ண­மாக  நோயா­ளிகள் பல்­வேறு கஷ்­டங்­களை அனு­ப­விப்­ப­தா­கவும்  ஒரு கட்­டிலில் இருவர் வீதம் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  சிறு­வர்கள் வார்டில் ஒரு கட்­டிலில்  மூவர் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வைத்தியர்களும்  தாதியர்களும் அர்ப்பணிப்புடன் சேவை புரிவதாகவும்   நோயாளிகளும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

(Visited 104 times, 1 visits today)

Post Author: metro