ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி : பாகிஸ்தான் 338, பக்கார் ஸமான் 114

இந்­தி­யா­வுக்கு எதி­ராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட பாகிஸ்தான் அணி­யினர், இந்­திய பந்­து­வீச்­சா­ளர்­களை விளாசி அடித்து 50 ஓவர்­களில் 4 விக்­கெட்­களை இழந்து 338 ஓட்­டங்­களைக் குவித்­தனர்.

fakhar-zaman

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் நடத்­தப்­படும் பல்­வேறு பிர­தான கிரிக்கெட் போட்­டி­களில் இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் இறுதி ஆட்டம் ஒன்றில் சந்­திப்­பது 2007 உலக இரு­பது 20 இறுதிப் போட்­டிக்குப் பின்னர் இதுவே முதல் தட­வை­யாகும்.


இப் போட்­டியின் 3ஆவது ஓவரில் ரன் அவுட்­டி­லி­ருந்து தப்­பிய பக்கார் ஸமான், அடுத்த ஓவரில் பும்­ராவின் பந்­து­வீச்சில் விக்கட் காப்­பா­ள­ருக்கு பிடி கொடுத்­த­போ­திலும் அது நோ போலாக அறி­விக்­கப்­பட்­டதால் மீண்டும் தப்­பினார்.

 

அது­வரை மந்த கதியில் ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டி­ருந்த பக்கார் அதன் பின்னர் அதி­ர­டியில் இறங்கி தனது நான்­கா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்­டியில் கன்னி சதம் குவித்தார். அவர் 106 பந்­து­களை எதிர்­கொண்டு 3 சிக்­சர்கள், 12 பவுண்ட்­றிகள் அடங்­க­லாக 114 ஓட்­டங்­களைப் பெற்றார்.


ஆரம்ப விக்­கட்டில் அஸ்ஹர் அலி­யுடன் (59) 128 ஓட்­டங்­களைப் பகிர்ந்த பக்கார் ஸமான், இரண்­டா­வது விக்­கெட்டில் மேலும் 72 ஓட்­டங்­களை பாபர் அஸா­முடன் பகிர்ந்தார். பாபர் அஸாம் 46 ஓட்­டங்­களைப் பெற்றார்.
ஷொயெப் மாலிக் 12 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

 
தொடர்ந்து மொஹமத் ஹபீஸ் (57 ஆ.இ.), இமாத் வசிம் (25 ஆ.இ.) ஆகிய இருவரும் வீழ்த்தப்படாத ஐந்தாவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

(Visited 61 times, 1 visits today)

Post Author: metro