டயகம – ஹட்டன் பிரதான வீதியில் பயணித்த பஸ் 80 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 28 பேர் காயம்!

(க.கிஷாந்தன், நோர்­டன்­பிரிட்ஜ் நிருபர்)

டய­க­ம­வி­லி­ருந்து போடைஸ் வழி­யாக ஹட்டன் நோக்கிப் பய­ணித்த இலங்கைப் போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ் ஒன்று டய­கம–ஹட்டன் பிர­தான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகு­தியில் விபத்­துக்­குள்­ளாகி சுமார் 80 அடி பள்­ளத்தில் வீழ்ந்­ததில் 28 பேர் காய­ம­டைந்­தனர்.

இந்தச் சம்­பவம் நேற்று இடம்­பெற்­றுள்­ளது. டய­கம பகு­தி­யி­லி­ருந்து பய­ணி­களை ஏற்றிக் கொண்டு ஹட்டன் பகு­திக்கு சென்ற குறித்த பஸ் நேற்று மாலை 3.30 மணி­ய­ளவில் பாதையை விட்டு விலகி சுமார் 80 அடி பள்­ளத்தில் வீழ்ந்த போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வி­பத்தில் காய­ம­டைந்த 28 பேரில் 6 பேர் பேரா­தெ­னிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனையோர் டிக்­கோயா ஆதார வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கவும் வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இவ்­வாறு மாற்­றப்­பட்­ட­வர்­களில் பெண் ஒருவர், நான்கு ஆண்கள், ஒரு குழந்தை என வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் மேலும் தெரி­வித்­தன. இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)