உயிரினங்கள் இருப்பதற்கு சாத்தியமான பூமியைப் போன்ற 7 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு

பூமியின் அள­வு­டைய  7 புதிய கிர­கங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன என அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மான நாசா நேற்­று­முன்­தினம் அறி­வித்­துள்­ளது. இக்­கி­ரங்­களில் உயிரி­னங்கள் இருப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூறுகள் உள்­ள­தா­கவும் நாசா தெரி­வித்­துள்­ளது.   மேற்­படி ஏழு கிர­கங்­களும் எமது பால்­வீ­தியில் எமது சூரிய தொகு­திக்கு வெளியில் உள்ள Trappist-1  ஒரு எனும் நட்­சத்­தி­ரத்தை சுற்றி வரு­கின்­றன எனத் தெர­விக்­கப்­பட்­டுள்­ளது. இவை பூமியி­லி­ருந்து 40 ஒளி­யாண்­டுகள் தூரத்தில் அமைந்­துள்­ள­தாக நாசா தெரி­வித்­துள்­ளது. (ஒளி­யா­னது ஒரு வரு­டத்தில் பயணம் செய்­யக்­கூ­டிய தூரம் அதாவது […]