அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் டில்லர்சன் பதவி நீக்கம்: அப்பதவிக்கு சி.ஐ.ஏ. பணிப்பாளர் மைக் பொம்பியோ நியமனம்

அமெ­ரிக்க வெளி­வி­வ­காரத் துறைக் குப் பொறுப்­பான இரா­ஜாங்க செய­லாளர் ரெக்ஸ் டில்­லர்­சனை ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று பத­வி­நீக்கம் செய்தார். புதிய இரா­ஜாங்கச் செய­லா­ள­ராக சி.ஐ.ஏ. பணிப்­பா­ள­ரான மைக் பொம்­பியோ நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 65 வய­தான ரெக்ஸ் டில்­லர்சன் 2017 பெப்­ர­வரி 1 முதல் அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லா­ள­ராக பதவி வகித்து வந்தார். இந்­நி­லையில், புதிய இரா­ஜாங்கச் செய­லா­ள­ராக மைக் பொம்­பி­யோவை நிய­மிப்­ப­தாக ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறி­வித்தார். 54 வய­தான மைக் பொம்­பியோ 2017 ஜன­வரி […]