வடக்கின் சமரில் யாழ். மத்திய கல்லூரி அபார வெற்றி!

(நெவில் அன்­தனி) யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் யாழ். மத்­திய அணிக்கும் இடையில் நடை­பெற்ற விறு­வி­றுப்­பான 112ஆவது வடக்கின் சமரில் மத்­திய கல்­லூரி ஒரு விக்­கெட்­டினால் அபார வெற்­றி­யீட்­டி­யது. 109 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு மூன்றாம் நாளான நேற்­று­முன்­தினம் தேநீர் இடை­வே­ளைக்கு சற்­று­முன்னர் தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த யாழ். மத்­திய கல்­லூரி அணி தடு­மாற்­றத்­துக்கு மத்­தியில் 2.3 ஓவர்கள் மீத­மி­ருக்க 9 விக்­கெட்­களை இழந்து 110 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றியை ருசித்­தது. மத்­திய அணி […]

சாதனை நிலை­நாட்­டிய ஜொய்­சனின் குதிக்­காலில் ஐந்து தையல்கள்

(நெவில் அன்­தனி) திய­கம மஹிந்த ராஜ­பக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று இரண்­டா­வது நாளாக நடை­பெற்ற கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் புதிய சாதனை நிலை­நாட்­டிய அள­வெட்டி அரு­ணோ­தயா கல்­லூ­ரியின் நெப்­தலி ஜொய்சன், குதிக்­காலில் ஏற்­பட்ட காயத்­திற்­காக ஐந்து தையல்கள் போட நேர்ந்­தது. இப் போட்­டியில் 4.61 மீற்றர் உயரம் தாவி போட்­டிக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டிய ஜொய்சன், 4.76 மீற்றர் உய­ரத்தைத் தாவ முயற்­சித்­த­போது மெத்­தையில் சிக்­குண்டு குதிக்­காலில் காயத்­திற்­குள்­ளா­ன­தாக அவ­ரது […]

யாழ் மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு; பதுளையில் 8 ஆக குறைப்பு

பதுளை மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6 இலிருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1016 ஆம்  ஆண்டின் வாக்காளர் பதிவு அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

மக்கள் வங்கியின் சுய வங்கி சேவை யாழ்ப்பாணத்தில்…

மக்கள் வங்­கியின் புதிய சுய வங்கி சேவை (self banking) மக்கள் வங்­கியின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி, பொது முகா­மை­யாளர் என். வசந்­த­கு­மா­ரினால் யாழ்ப்­பாணம் ஸ்டென்லி வீதியில் அமைந்­துள்ள மக்கள் வங்கி கிளையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.     மக்கள் வங்­கியின் Digital banking வேலை­திட்­டத்தின் பகு­தி­யாக, யாழ்ப்­பா­ணத்­திலும் சுய வங்கி சேவை தொகுதி தன்­னி­யக்க இயந்­திரம் (ஏ.ரி.எம்), பண­வைப்பு இயந்­திரம் (CDM), பற்­று­சீட்டு கட்­ட­ணங்கள் இயந்­திரம் (kisok) ஆகி­ய­வையின் சேவை­யா­னது ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் மூலம் 24 மணி­நேரம், […]