தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை தனது கட்அவுட்டிடம் கேட்குமாறு செய்தியாளர்களிடம் கூறிய தாய்லாந்து பிரதமர்

தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை தனது கட்அவுட்டிடம் கேட்குமாறு செய்தியாளர்களிடம் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சா. கூறியதுடன், ஒலிவாங்கிக்கு (மைக்) முன்னால் தனது கட் அவுட்டை விட்டுச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரியான பிரயுத் சான் ஒச்சா, 2014 ஆம் ஆண்டு இரத்தம்சிந்தா புரட்சியொன்றின் மூலம் தாய்லாந்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் எதிர்வரும் சனிக்கிழமை சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் […]