ரஷ்ய வர்த்தக நிலையத்தில் பாரிய தீ: 37 பேர் பலி, 64 சிறார்களை காணவில்லை

ரஷ்யாவில் வர்த்தக நிலையமொன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 37 பேர் உயிரிழந்ததுடன் 41 சிறார்கள் உட்பட 64 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேமேரோவோ நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர்களில் 9 சிறார்களும் அடங்குவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்படி ஷொப்பிங் நிலையத்திலுள்ள திரையரங்குகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இருந்த நிலையில் இத்தீப்பரவல் இடம்பெற்றுள்ளது.   Просто ад pic.twitter.com/AHoSSluBbL — Dasha (@DashaOy) March 25, 2018