மருதானையில் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் படுகாயம்

கொழும்பு மருதானையில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்களில் வந்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

‘எங்கும், யாவ­ருக்கும் கால்­பந்­தாட்டம்’

(நெவில் அன்­தனி) இலங்கை கால்­பந்­தாட்ட விளை­யாட்­டிற்கும் நிரு­வா­கத்­திற்கும் புது­வ­டிவம் கொடுக்கும் உய­ரிய நோக்­கத்­துடன் எதிர்­வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளன நிரு­வா­கி­க­ளுக்­கான தேர்­தலில் தமது தலை­மை­யி­லான அணி­யினர் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அநுர டி சில்வா தெரி­வித்தார். எங்கும், யாவ­ருக்கும் கால்­பந்­தாட்டம், இங்­கி­ருந்து புதிய பயணம் ஆரம்­பிக்­கின்­றது என்ற கருப்­பொ­ருளில் கொள்­ளுப்­பிட்டி, ரேணுகா ஹோட்­டலில் புத­னன்று இரவு நடை­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போதே தலைவர் பத­விக்கு மீண்டும் போட்­டி­யிடும் சம­காலத் தலைவர் அநுர டி சில்வா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு […]

யாழ் மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு; பதுளையில் 8 ஆக குறைப்பு

பதுளை மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6 இலிருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1016 ஆம்  ஆண்டின் வாக்காளர் பதிவு அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட Darter பறவை

(மது­ரங்­குளி  நிருபர்) முந்தல் பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட மது­ரங்­குளி பால­சோலை கிரா­மத்தின் செங்­க­கட்டு ஸ்ரீ சங்­க­மித்­தா­ராம விகா­ரைக்குச் சொந்­த­மான காணியின் பின்­பு­றத்தில்  காய­ம­டைந்த நிலையில் பறக்க முடி­யாமல் வீழ்ந்­தி­ருந்த Darter எனும் அபூர்­வ­மான பெரிய பறவை ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது.  கடந்த வெள்­ளிக்­கி­ழமை இப்­ப­றவை பால­சோலை பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பெண் ஒரு­வரால் மீட்­கப்­பட்­டுள்­ளது. பார்ப்­ப­தற்கு மிக அபூர்­வ­மானதாக தென்­பட்ட இந்தச் பறவை, சுக­யீ­ன­முற்­றி­ருந்­ததால் ஏனைய மிரு­கங்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­ப­தற்­காக குறித்த பெண் அப்­ப­ற­வையை தனது வீட்­டுக்கு எடுத்து வந்து […]

மக்கள் வங்கியின் சுய வங்கி சேவை யாழ்ப்பாணத்தில்…

மக்கள் வங்­கியின் புதிய சுய வங்கி சேவை (self banking) மக்கள் வங்­கியின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி, பொது முகா­மை­யாளர் என். வசந்­த­கு­மா­ரினால் யாழ்ப்­பாணம் ஸ்டென்லி வீதியில் அமைந்­துள்ள மக்கள் வங்கி கிளையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.     மக்கள் வங்­கியின் Digital banking வேலை­திட்­டத்தின் பகு­தி­யாக, யாழ்ப்­பா­ணத்­திலும் சுய வங்கி சேவை தொகுதி தன்­னி­யக்க இயந்­திரம் (ஏ.ரி.எம்), பண­வைப்பு இயந்­திரம் (CDM), பற்­று­சீட்டு கட்­ட­ணங்கள் இயந்­திரம் (kisok) ஆகி­ய­வையின் சேவை­யா­னது ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் மூலம் 24 மணி­நேரம், […]