Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அஜித் எனக்கு அண்ணன் மாதிாி - ஷாமிலி
2016-12-27 21:39:40

குழந்தை நட்­சத்­தி­ரங்­க­ளாக, அக்­காவும், தங்­கை­யு­மாக கொடி கட்டி பறந்­த­வர்கள் ஷாலி­னியும், ஷாமி­லியும். நடி­கர்­களை விட, இவர்கள் பிஸி­யாக இருந்த காலம் உண்டு.

 

குழந்தை நட்­சத்­திரம் ஷாமிலி, இப்­போது குமாரி ஷாமி­லி­யாக, ‘வீர சிவாஜி’ படம் மூலம் அறி­மு­க­மாகியுள்ளார்.

 

தெளி­வான பேச்சு, கலை மீதான ஆர்வம் ஆகி­யவை, அவ­ரது ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்தை உணர்த்­து­கின்­றன; அவ­ருடன் ஒரு சந்­திப்பு:

 

ஹீரோயின் அவ­தா­ரத்­துக்கு இவ்­வ­ளவு தாமதம் ஏன்?
விஷுவல் கம்­யூ­னி­கேஷன் படிப்பை முடித்து, அதன் மேற் படிப்­புக்­காக, மூன்று ஆண்­டுகள் சிங்­கப்­பூரில் வசிக்க வேண்­டி­யி­ருந்­தது.

 

சினிமா பற்­றிய தொழில்­நுட்­பங்­களை கற்­றபின், திடீ­ரென ஒரு குழப்பம் இருந்­தது. இப்­ப­டியே சிங்­கப்­பூரில் செட்­டி­லாகி விட­லாமா அல்­லது இந்­தி­யா­வுக்கு போய், சினி­மாவில் நடிக்­க­லாமா என்ற யோச­னையில் இருந்தேன்.

 

அதற்கு பின், சென்­னைக்கு வந்து, ‘வீர சிவாஜி’ படத்தின் கதையை கேட்ட பின், அதில் நடிக்க சம்­ம­தித்தேன்.

 

வீர சிவாஜி பட அனு­பவம் குறித்து?
மிகவும் மென்­மை­யான கதை­யு­டைய படத்தில் தான் அறி­மு­க­மாக வேண்டும் என முடிவு செய்தேன். அதற்­கேற்ற வகையில், இந்த படத்தின் கதை இருந்­தது. ரொம்ப ஈசி­யான ஸ்கிரிப்ட். இதில், நடிப்­புக்­காக ரொம்ப மெனக்­கெ­ட­வில்லை.

 

விக்ரம் பிர­புவின் தங்­கையும், நானும், சின்ன வயதில் இருந்தே தோழிகள். அதனால், விக்ரம் பிர­புவும், அவ­ரது குடும்­பமும் எனக்கு ஏற்­க­னவே நன்­றாக தெரியும். அதனால், அவ­ருடன் நடிக்­கும்­போது, எனக்கு சிரமம் தெரி­ய­வில்லை.

 

பேபி ஷாமி­லி­யாக நடித்­த­தற்கும், குமாரி ஷாமி­லி­யாக நடித்­த­தற்கும், என்ன வித்­தி­யாசம்? 
நிறைய வித்­தி­யாசம் இருக்கு. குழந்­தை­யாக நடிக்­கும்­போது, கெமரா பயம் இல்­லாமல் சர்­வ­சா­தா­ர­ண­மாக நடித்து, அசத்தி விடுவேன். எப்­படி நடிக்க வேண்டும் என்­பதை, டைரக்­டரும், அப்­பாவும் சொல்லிக் கொடுப்பார்.

 

இப்­போது, ஹீரோ­யி­னாக நடிக்­கும்­போது, கெம­ரா­வுக்கு முன்­னாடி வந்­த­போது, பயந்தேன். இப்­போது, அப்பா உதவி இல்­லாமல், நானே நடிக்க வேண்­டி­யி­ருந்­தது.

 

அக்கா ஷாலினி, ஏதா­வது ஐடியா கொடுப்­பது உண்டா?
எங்க வீட்டை பொறுத்­த­வரை, யார் வேலை­யிலும், யாரும் தலை­யி­டு­வது இல்லை. என்­னு­டைய நடிப்பு விட­யத்தில் அக்கா எதுவும் சொல்­வது இல்லை. ஆனால், மேக் அப், ஹேர்ஸ்டைல் போன்ற விட­யத்தில், சில ஆலோ­ச­னை­களை கூறு­வது உண்டு.

 

அஜித் பற்றி சொல்­லுங்க, அவர் நடித்த படங்­களில் உங்­க­ளுக்கு பிடித்­தது என்ன?
ரொம்ப பேச மாட்டார், வீட்டில் சினிமா பற்றி பேசு­வது குறை­வுதான், அவர் படங்­களில் எனக்கு பிடித்­தது ‘வாலி’, ‘வில்லன்’, ‘காட்­பாதர்’, ‘பில்லா’ இந்த படங்கள் ரொம்ப பிடிக்கும்.

 

அஜித் ஜோடியா நடிக்க வாய்ப்பு வந்தால், நடிப்­பீர்­களா?
அவர், எனக்கு அண்ணன் மாதிரி. அவ­ருடன் எப்­படி ஜோடி­யாக நடிக்க முடியும்? கண்­டிப்­பாக நடிக்க மாட்டேன். ஆனால், அவர் நடிக்கும் படத்தில், முக்­கி­ய­மான வேடம் கிடைத்தால், அதற்கு சம்­ம­திப்பேன்.

 

என்ன மாதிரியான கதை­களில் நடிக்க ஆசை?
இப்­போ­தைக்கு கன­மான கெரக்­டர்­களில் நடிக்க வேண்டாம் என நினைக்­கிறேன். வர்த்­தக ரீதி­யி­லான படங்­களில், நல்ல ரோல் கிடைத்தால் நடிப்பேன். நகர்ப்­பு­றத்து பெண் வேடம், எனக்கு பொருத்­த­மாக இருக்கும் என, நினைக்­கிறேன்.

 

நீங்கள் யாரு­டைய ரசிகர்?
சின்ன வயதில் இருந்தே, ஷாரூக் கான் ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த படங்­களை விரும்பி பார்ப்பேன். மற்­ற­படி, எல்லா நடி­கர்­களின் படங்­க­ளையும் விரும்பி பார்ப்பேன்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.