Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஆடை சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோாினார் சுராஜ்; தமன்­னாவுக்கு பாராட்டு
2016-12-28 21:02:16

பணம் கொடுத்தால் ஆடை­களை களை­வார்கள் என்று நடி­கை­களை ஆபா­ச­மாக விமர்­சித்­த­தற்­காக இயக்­குநர் சுராஜ் மன்­னிப்பு கேட்­டுள்ளார். 

 

'கத்தி சண்டை' படத்தை விளம்­ப­ரப்­ப­டுத்தும் நோக்கில் அளித்­துள்ள பேட்­டியில்,

 

 "நாயகி முழு­மை­யாக உடை­ய­ணிந்து நடிப்­பதில் எல்லாம் எனக்கு உடன்­பாடு கிடை­யாது.

 

பணம் கொடுத்து திரை­ய­ரங்கில் படம் பார்க்கும் போது, தமன்­னாவை கிளா­ம­ராக பார்க்கத் தான் விரும்­பு­வார்கள். அந்த வகை­யில்தான் தமன்­னாவை ‘கத்­திச்­சண்டை’ படத்தில் கவர்ச்­சி­யாக நடிக்க வைத்தேன். 

 

கவர்ச்­சி­யாக நடித்த நடி­கை­கள்தான் பெரிய கதா­நா­ய­கி­க­ளாக உயர்ந்திருக்­கி­றார்கள். ரூ.1 கோடிக்கு மேல் நடி­கைகள் சம்­பளம் வாங்­கு­கின்­றனர். அவர்கள் டைரக்டர் சொல்­கி­ற­படி கவர்ச்­சி­யாக நடிக்­கத்தான் வேண்டும்.

 

நடிப்­புத்­தி­ற­மையை காட்­டு­வ­தற்கு வேறு கதை­களும், டெலி­விஷன் தொடர்­களும் இருக்­கின்­றன. எனது படங்­களில் நடி­கை­களை கவர்ச்­சி­யாக நடிக்க வைத்­து­வி­டுவேன்’ என்று கூறி­யி­ருந்தார்.

 

சுராஜின் கருத்­துக்கு நயன்­தாரா மற்றும் தமன்னா இரு­வ­ருமே கடும் எதிர்ப்பு தெரி­வித்­தார்கள். 

 

நடி­கைகள் பற்றி தரக்­கு­றை­வாக பேசு­வ­தற்கு சுராஜ் யார்? பணம் கொடுக்­கி­றார்கள் என்­ப­தற்­காக கதா­நா­ய­கிகள் ஆடை­களை களைந்­து­வி­டு­வார்கள் என்று அவர் கரு­து­கி­றாரா? ஆடை­களை களை­ப­வர்கள் தான் நடி­கைகள் என்ற கண்­ணோட்­டத்­தில்தான் அவர் கதா­நா­ய­கி­களை பார்க்­கி­றாரா? ஆடை­களை களை­யவே நடி­கைகள் பணம் வாங்­கிக்­கொண்டு நடிக்­கின்­றனர் என்று சுராஜ் கூறி­யதன் மூலம், சினி­மாவில் இப்­ப­டித்தான் நடக்­கி­றது என்று எல்­லோரும் நடி­கை­க­ளைப்­பற்றி தவ­றாக நினைக்கும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது என நயன்­தாரா தெரி­வித்­துள்­ளார்.

 

மேலும், "சுராஜ் என்­னிடம் மட்­டு­மன்றி ஒட்­டு­மொத்த திரை­யு­லக கதா­நா­ய­கி­க­ளி­டமும் மன்­னிப்பு கேட்டே ஆக வேண்டும்" என்று தமன்னா கடு­மை­யாக சாடி­யி­ருந்தார்.

 

இந்­நி­லையில், இயக்­குநர் சுராஜ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் "தமன்னா உட்­பட திரை­யு­லகின் அனைத்து கதா­நா­ய­கி­க­ளி­டமும் மன்­னிப்புக் கேட்டு கொள்­கிறேன்.

 

யாரையும் தவ­றான நோக்கில் சித்­த­ரிப்­பதும், அவர்­க­ளது நம்­பிக்­கை­களை காயப்­ப­டுத்­து­வதும் எனது நோக்­க­மல்ல. மீண்டும் ஒரு முறை மன்­னிப்புக் கேட்டு கொள்­கிறேன். எனது வார்த்­தை­களை திரும்ப பெற்றுக் கொள்­கிறேன்" என்று தெரி­வித்­துள்ளார்.

 

சுராஜ் மன்னிப்புக் கோரியுள்ளதால், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

 

இதேவேளை, தனது புதிய இயக்குநர் சுராஜின் கருத்தை துணிவுடன் எதிர்த்து நின்றமைக்காக நடிகை தமன்னாவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.