Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கிளாமராக நடித்தாலும் தொப்புள் காட்டமாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்
2016-12-29 22:03:10

‘அட்ட கத்தி’, ‘காக்கா முட்டை’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.  தற்போது மோ பேய் படத்தில் நடிக்கிறார். புவன் ஆர்.நுலன் இயக்குகிறார். இதில் நடித்ததுபற்றி ஐஸ்வர்யா கூறும்போது,

 

துணை நடிகையாக இப்படத்தில் எனது கதாபாத்திரம் இடம்பெறு கிறது. சமீபகாலமாக வரும் பல்வேறு பேய் கதைகளிலிருந்து இது மாறுபட்ட பேய் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

 

நீங்கள்தான் பேய் வேடம் ஏற்கிறீர்களா என்கிறார்கள். இதெல்லாம் படத்தில் பார்க்கும்போது புரியும். ‘காக்கா முட்டை’ படத்தில் ஏற்ற வேடம் போல் மீண்டும் ஏற்பீர்களா என்கிறார்கள்.

 

கண்டிப்பாக நடிப்பேன். பறந்து செல்லவா படத்தில் கிளாமராக நடித்திருந்தீர்களே தொடர்ந்து கிளாமராக நடிப்பீர்களா என்றும் கேட்கிறார்கள். அதில் கிளாமராக நடித்தேன் ஆனால் தொப்புள் தெரியும்படி ஆடை அணிந்து நடிக்கவில்லை.

 

கதாபாத்திரத்துக்கு தேவையென்றால் கிளாமராக நடிப்பதில் தவறு இல்லை என்றார். பட இயக்குநர் புவன் ஆர்.நுலன் கூறும்போது, 

 

‘மோ’ என்ற டைட்டிலுக்கு அர்த்தம் என்ன என்கிறார்கள். அது சஸ்பென்ஸ். இதன் படப்பிடிப்பு கடுமையான மழை வெள்ள நேரத்தில் நடந்தது. ஆனாலும் ஐஸ்வர்யா உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் தவறாமல் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தனர்.

 

சுரேஷ் ரவி, முனிஷ்காந்த், யோகி பாபு தர்புகா சிவா, மைம் கோபி, செல்வா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசை. விஷ்ணு ஸ்ரீ கே ஒளிப்பதிவு. ரோஹித் ரமேஷ் தயாரிப்பு. பேய் படமாக இருந்தாலும் இப்படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டது என்றார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.