Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நேருக்கு நேர் முதல் எஸ்3 வரை சூர்யா
2016-12-30 15:45:43

அப்பா பிர­ப­ல­மான நடி­க­ராக இருந்­தாலும் சூர்யா நடிக்க வந்­ததே யதேச்­சை­யாக நடந்­த­துதான். சினி­மாவில் ஹீரோ­வாக வேண்டும் என்­கிற திட்­ட­மெல்லாம் சிறு­வ­யதில் சூர்­யா­வுக்கு இருந்­ததே இல்லை. எல்லோா­ரையும் போலவே 12பி பஸ் பிடித்து காலே­ஜுக்கு போய்க்­கொண்­டி­ருந்தார்.

 

அப்­போது அவர் பெயர் சர­வணன். படித்து முடித்­த­துமே மாதம் ரூபாய் எழு­நூறு சம்­ப­ளத்­துக்கு ஒரு கார்மென்ட்ஸ் கம்ப­னியில் வேலை. அந்த வேலையில் கண்ணும் கருத்­து­மாக இருந்­ததால் கொஞ்சம் கொஞ்­ச­மாக முன்­னேறி பதி­னைந்­தா­யிரம் ரூபாய் சம்­பளம் பெறும் பெரிய போஸ்­டிங்கில் அமர்ந்தார்.

 

சொந்­த­மாக ஒரு கார்மென்ட் ஃபேக்­டரி தொடங்­க­வேண்டும் என்­பதே சர­வ­ணனின் கனவு, லட்­சியம் எல்லாம். ‘சர­வ­ணனை நடிக்க வைங்க’ என்று சிவக்­கு­மாரைப் பார்க்க வரும் இயக்­கு­நர்கள் கேட்­டுக்­கொண்டே இருப்­பார்கள். கூச்ச சுபாவம் கொண்ட சர­வ­ணனோ, அந்த வாய்ப்­பு­களை மறுத்துக் கொண்டே இருந்தார்.

 

இயக்­குநர் வசந்த், ‘ஆசை’ எடுக்­கும்­போது முதலில் சர­வ­ண­னைத்தான் அறி­மு­கப்­ப­டுத்த கேட்டார். அந்த வேடத்­தில்தான் அஜீத்­குமார் நடித்தார்.

 

சில மாதங்­க­ளுக்குப் பிறகு அதே வசந்த் அஜித் - விஜய் இரட்டை ஹீரோக்கள் என்று திட்­ட­மிட்டு எடுத்த ‘நேருக்கு நேர்’ படத்தில் திடீ­ரென அஜீத்தால் நடிக்க இய­லாமல் போய்­விட்­டது.

 

இந்தப் படத்தின் தயா­ரிப்­பாளர் மணி­ரத்னம். அவரே சிவக்­கு­மா­ரிடம் கேட்க, இம்­முறை சர­வ­ணனால் மறுக்க இய­ல­வில்லை. சூர்யா என்­கிற பெயரில் அறி­மு­க­மானார்.தான் அறி­மு­க­மான சூழலை சூர்யா இப்­படிச் சொல்­கிறார்.

 

“நல்லா யோசிச்சேன். அப்பா முன்­னாடி சொன்ன அட்வைஸ் நினை­வுக்கு வந்­தது. ‘ஒரு டிகி­ரியை முடிச்­சிடு. அதுக்­கப்­புறம் என்ன ஆக­லாம்னு யோசிச்­சிக்­கலாம்’. இப்போ எங்­கிட்டே ஒரு டிகிரி இருந்­தது.

 

கூடவே கார்மென்ட் எக்ஸ்போர்ட் தொழிலில் கொஞ்சம் அனு­ப­வமும் இருந்­தது. ஒரு படம் நடிச்சிப் பார்க்­க­லாமே, சரி­யா­வந்தா தொடர்ந்து நடிக்­கலாம். இல்­லைன்னா மறு­ப­டியும் கார்மென்ட் தொழி­லுக்கு போயி­ட­லாம்னு நெனைச்சேன். சர­வ­ணனா இருந்த நான் ‘சூர்யா’ ஆனேன்.”

 

1997ஆம் ஆண்டு சூர்யா அறி­மு­க­மானார். ‘நேருக்கு நேர்’ வெற்­றிப்­ப­ட­மாக அமைந்த போதிலும், அடுத்­த­டுத்த படங்கள் வணி­க­ரீ­தி­யாக சரி­யாகப் போக­வில்லை. நேரில் அனு­தா­ப­மாக இவ­ரிடம் பேசு­ப­வர்கள், பின்னால் போய் கிண்டல் அடித்துக் கொண்­டி­ருந்­தார்கள்.

 

“சினி­மாத்­துறை ஆரம்­பத்­துலே ரொம்ப கஷ்­டமா இருந்­துச்சி. என்­னோட பிளஸ் என்ன, என்­னோட மைனஸ் என்­னன்னு எனக்கே தெரி­யாது. எந்த மாதிரி படங்­களை என்­னால செய்­ய­மு­டியும், எப்­படி டிரெஸ் பண்­ணணும், எப்­படி நடிக்­கணும், இதை­யெல்லாம் தெரிஞ்­சுக்க எனக்கு நாலு வருஷம் ஆச்சி.
இடையில் நிறைய தோல்­விகள். எனக்­கான நேரத்­துக்­காக, மீனைப்­பி­டிக்க காத்­துக்­கிட்­டி­ருக்­குற கொக்கு மாதிரி அமை­தியா இருந்தேன்.

 

இயக்­குநர் பாலா­வோட ‘சேது’ பார்த்­தப்­போதான் எனக்கு ஏதோ ஒரு பிடிப்பு கிடைச்­ச­மா­திரி உணர்ந்தேன்.

 

எந்த மாதி­ரி­யான படங்­களை நான் நடிக்­க­ணும்னு ஒரு ‘ஐடியா’ அப்­போதான் கிடைச்­சது. “உங்க இயக்­கத்­துலே ஒரு படம் நடிக்­கணும் சார்”னு பாலா சாரி­டமே கேட்டேன். அவ­ரோட அடுத்த பட­மான ‘நந்­தா’வில் நடிக்க வெச்சார். அதுக்­கப்­புறம் தொடர்ச்­சியா ஏறு­மு­கம்தான்.

 

ரொம்ப ஈஸியா சொல்­லிட்டேன். ஆனா வெற்­றிக்­காக பெரிய போராட்­டமே நடத்த வேண்­டி­யி­ருந்­தது. அந்த நாலு வரு­டத்­திலே எவ்­வ­ளவு கேலி, எவ்­வ­ளவு கிண்டல், எத்­தனை போராட்டம்?சினி­மாத்­து­றைக்கு வந்தும் நான் சர­வ­ண­னாவே இருந்தேன். எப்­ப­டி­யா­வது சூர்­யாவா மாறி­ட­ணும்னு வெறித்­த­னமா உழைச்சேன். எனக்கு அப்போ சரியா டான்ஸ்­கூட வராது.

 

ஒரு பத்­தி­ரி­கையில் கூட எழு­தி­னாங்க, ‘இவர் டான்ஸே ஆடாமல் இருந்தா புண்­ணி­யமா போகும்’னு. 24 வய­சுக்கு அப்­பு­ற­மாதான் டான்ஸே கத்­துக்க ஆரம்­பிச்சேன்.

 

அதுக்­கப்­பு­றம்தான் ஸ்டண்ட் கத்­துக்­கிட்டேன். இதெல்லாம் சின்ன வய­சு­லேயே கத்­துக்­கிட்­டாதான் உண்­டுன்னு சொல்­லு­வாங்க. ஒரு மனு­ஷ­னாலே பண்ண முடி­ய­றது இன்­னொரு மனு­ஷ­னாலே நிச்­சயம் முடி­யும்னு நம்­பினேன்.

 

இதற்­கி­டையே வேற ஒரு பிரச்­சி­னையும். ‘நீ பார்க்க உங்­கப்பா மாதி­ரியே இருக்கே. அவரு 20, 25 வருஷம் நடிச்­சதைத் தான் திரும்ப நீயும் நடிக்கப் போறே. அவ­ரைத்­தானே அப்­ப­டியே நீ ஜெராக்ஸ் பண்­ணப்­போ­றே’ன்னு நிறை­யபேர் பேசி­னாங்க.

 

அவ­ரோட ரத்தம் நான். அவ­ரோட சாயல் என்­னு­டைய நடை, உடை, பாவ­னை­களில் இருப்­பதில் ஆச்­ச­ரியம் எது­வு­மில்லை.

 

ஆனா எனக்­கான ஒரு தனித்­துவம் வேணும்னு விரும்­பினேன். அப்பா நடிச்ச படங்­களைப் பார்ப்­பதை தவிர்த்தேன். அப்பா அப்போ டிவி சீரி­யல்­களில் ரொம்ப நல்லா பண்­ணிக்­கிட்­டி­ருந்தார்.

 

தினமும் வீட்டில் எல்­லாரும் அப்­பா­வோட நடிப்பை பார்த்­துக்­கிட்­டி­ருப்­பாங்க. நான் வீட்­டி­லேயே இருந்­தாலும் அதெல்லாம் பார்க்­க­மாட்டேன்.

 

அவ­ரோட தாக்கம் எனக்­குள்ளே ஊடு­ரு­வி­டக்­கூ­டா­துன்னு ரொம்ப மெனக்­கெட்டேன். எனக்­குன்னு ஒரு அடை­யா­ளத்தை நான் தேடிக்­கிட்­டி­ருந்த காலக்­கட்டம் அது.தொடர்­தோல்­வி­களால் சோர்­வ­டையும் போதெல்லாம் பார­தியார் கவி­தை­கள்தான் எனக்கு ஆறுதல்.

 

யாரு­மில்­லாத தனி­ய­றையில் சத்­த­மாகப் பாடுவேன். ஒரு­கட்­டத்தில் என் உள்­மன எழுச்­சி­களை சம­ப்­ப­டுத்த தியானம் செய்ய ஆரம்­பித்தேன். அது மனதை ஒரு­மு­கப்­ப­டுத்த, எனக்­குள்­ளேயே ஒரு சக்­தியை வளர்க்க ரொம்­பவும் உத­வி­யது. என்னை நானே அப்­போ­துதான் நம்ப ஆரம்­பித்தேன்.

 

அய்யோ நான் பாவம்னு அனு­தா­பத்தை எனக்கு நானே வளர்த்­துக்­காம இருந்­தது என்னை சீக்­கி­ரமா வெற்றி பெற வெச்­சது. யாரி­டமும் என் சோகத்தை பகிர்ந்­துக்­கிட்­ட­தில்லை. ஏன்னா ஒருத்­த­ரோட சோகம் இன்­னொ­ருத்­த­ருக்கு அவ்­வ­ளவு முக்­கி­யமா படாது.

 

நாம் எது நடக்­க­ணும்னு விரும்­பு­கிறோ மோ, அதை உள்­ம­ன­சுலே ஒரு விதையா விதைச்­சிட்டு, செடியா வளர்க்­கணும். அதுவே பூத்து, காய்ச்சி, பழம் தரும். அந்த நாலு வருஷம் எனக்கு கத்­துக்­கொ­டுத்த முக்­கி­ய­மான பாடம் இது.

 

அந்த காலக்­கட்­டத்­துலே நான் என்­னென்ன தப்பு பண்­ணேன்னு எனக்கே தெரியும். திரும்­பவும் எந்தக் காலத்­தி­லேயும் அந்த தப்­பு­களை திரும்ப செய்­யவே மாட்டேன்.

 

அப்பா கொடுத்த சுதந்­திரம் என்னை பொறுப்­பு­ணர்வு கொண்­ட­வனா மாற்­றி­யது. என் குடும்பம் தந்த ஆத­ரவும், என்­னோட போராட்­ட­மான கட்­டத்தில் ரொம்ப முக்­கி­ய­மா­னது” என்று தான் கடந்து வந்த கல்லும், முள்­ளு­மான பாதையை நினைவு கூர்­கிறார் சூர்யா.

 

‘வாழ்க்­கையில் வெற்றி பெறு­வது எப்­படி?’ என்­ப­தற்கு சூர்யா ஒரு ஃபார்­முலா வைத்­தி­ருக்­கிறார். அவர் வார்த்­தை­யா­லேயே அதைக் கேட்போம்.

 

“நாம யாரை பின் தொட­ரணும், யாரை முன் நிறுத்­தணும் என்­கிற குழப்பம் எல்­லா­ருக்கும் இருக்கும்.

 

இவர் ஒழுங்கா, அவர் ஒழுங்­கான்னு மாத்தி மாத்தி கேட்­டுக்­கிட்­டி­ருக்கோம். நாம ஒழுங்கா இருந்­தாதான் இவர், அவர் எல்லாம் ஒழுங்­கா­வாங்­கங்­கி­றதை நாம முதல்லே புரிஞ்­சுக்­கணும்.எனக்கு பெரிய ஆதர்சம் என்று சொன்னால் ஏ.ஆர்.ரஹ்­மானும், டோனி­யும்தான்.

 

எவ்­வ­ளவு பெரிய வெற்­றி­களைக் குவித்தும், அடக்­கமா எப்­படி இருக்க முடியும் என்­பதை இவங்­க­கிட்­டேதான் கத்­துக்­கணும்.

 

ஒஸ்கர் விருதை ரஹ்மானும், உலகக் கோப்பையை டோனியும் தள்ளிநின்று மூணாவது மனிதர்களாக பார்க்கக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருக்காங்க. இந்த மனப்பான்மையை வளர்த்துக்கிறதுதான் அடுத்தடுத்த வெற்றிகளைக் குவிக்க உதவும். இல்லேன்னா கிடைச்ச வெற்றியையே நினைச்சி, நம்மை நாமே மெச்சிக்கிட்டு தேங்கிடுவோம்.

 

எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்க செய்துக்கிட்டிருக்கிற வேலையோட சிறப்பான எல்லையைத் தொடணும். எதை எடுத்துக்கிட்டாலும், எதை கத்துக்கிட்டாலும், எதை நினைச்சாலும், எப்படி செயல்பட்டாலும் முழுமையாக, சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி.”

 
இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.