Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'தங்கல்' திரைப்­ப­டத்தின் 7 வசூல் சாத­னைகள்
2016-12-30 16:02:29

அமீர் கானின் தங்கல் திரைப்­படம் வெளி­யாகி முதல் வார இறு­தியில் 7 வசூல் சாத­னை­களைப்  படைத்­துள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்­தி­யாவில் இப்­படம் வெளி­யா­கி­யது. 4 தினங்­களில் 130 கோடி இந்­திய ரூபாவை (284 கோடி இலங்கை ரூபா) இப்­படம் படம் வசூ­லித்­துள்­ளது. 

 

 

நிதீஷ் திவாரி இப்­ப­டத்தை இயக்­கி­யி­ருந்தார். இந்­திய மல்­யுத்த வீராங்­க­னை­க­ளான கீதா போகட், பபிதா குமாரி ஆகி­யோரின் தந்­தையும் முன்னாள் மல்­யுத்த வீர­ரு­மான மஹாவீர் சிங் போகட்டின் வாழ்க்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தங்கல் திரைப்­படம் விமர்­ச­கர்­க­ளி­டமும் சிறந்த வர­வேற்பை பெற்­றுள்­ளது.

 

அதே­வேளை 7 புதிய சாத­னை­க­ளையும் முதல் வார­இ­று­திக்குள் தங்கல் திரைப்­படம் படைத்­தது. அச்­சா­த­னை­களின் விபரம்:

 

மத்­திய கிழக்கில் வெள்­ளிக்­கி­ழ­மை­யொன்றில்  அதிக வசூல்:


தங்கல் திரைப்­படம் கடந்த வெள்­ளிக்­கிழமை மத்­திய கிழக்கு நாடு­களில் 953000 டொலர்­களை (சுமார் 6.45 கோடி இந்­திய ரூபா) வசூ­லித்­துள்­ளது.

இந்தி மொழி திரைப்­ப­ட­மொன்று மத்­திய கிழக்கில் வெள்­ளிக்­கி­ழமை தினத்தில் வசூ­லித்த மிக அதி­க­மான தொகை இது.

 

அமெ­ரிக்­காவில் இந்­திய பட­மொன்றின் மிக அதி­க­மான முதல் நாள் வசூல்:

 

அமெ­ரிக்­காவில் இப்­படம் முதல் நாளில் 17 லட்சம் டொலர்­களை (11.51 கோடி இந்­திய ரூபா) வசூ­லித்­துள்­ளது. இது அமெ­ரிக்­காவில் இந்­திய பட­மொன்று முதல்­நாளில் வசூ­லித்த மிக அதி­க­மான தொகை­யாகும். 

 

அவுஸ்­தி­ரே­லி­யாவில் இந்­திப்­ப­ட­மொன்றின் மிக அதிக முதல் நாள் வசூல்:


அவுஸ்­தி­ரே­லி­யாவில் தங்கல் திரைப்­படம் முதல் நாளில் 182000 அமெ­ரிக்க டொலர்­க­ளை வசூ­லித்­தது. அவுஸ்­தி­ரே­லியா மற்றும் அமெ­ரிக்­காவில் இந்­திய பட­மொன்று வசூ­லித்த மிக அதி­க­மான தொகை இது­வாகும்.

 

இந்­தி­யாவில் 3 ஆவது நாளில் மிக அதிக வசூல் :

 

தங்கல் திரைப்­படம் இந்­தி­யாவில் 3 ஆவது நாளான கடந்த ஞாயி­றன்று 42.35 கோடி இந்­திய ரூபாவை வசூ­லித்­த­மையும் புதிய சாத­னை­யாகும்.

 

இதற்குமுன் சல்மான் கானின் பஜ்­ரங்கி பைஜான் திரைப்­படம் 3 தினங்­களில் 38.75 கோடி இந்­திய ரூபாவை வசூ­லித்­த­மையே சாத­னை­யாக இருந்­தது. 

 

 

ஞாயிறு தினத்தில் மிக அதிக வசூல் :

 

ஞாயிறு தின­மொன்றில் மிக அதி­க­மான வசூல் சாத­னையும் தங்கல் திரைப்­படம் முறி­ய­டித்­துள்­ளது. கடந்த ஞாயி­றன்று 42.35 கோடி ரூபாவை இப்­படம் வசூ­லித்து, ஞாயிறு வசூ­லிலும் பஜ்­ரங்கி பைஜான் திரைப்­ப­டத்தின் சாத­னையை முறி­ய­டித்­துள்­ளது.

 

நத்தார் தினத்தில் மிக அதிக வசூல் :

 

கடந்த ஞாயிறு தினம் நத்தார் தின­மாகும். நத்தார் தினத்தில் மிக அதிக தொகையை (42.35 கோடி இந்­திய ரூபாவை ) வசூ­லித்த திரைப்­ப­ட­மா­கவும் தங்கல் விளங்­கு­கி­றது.

 

இதற்­குமுன் அமீர் கானின் மற்­றொரு திரைப்­ப­ட­மான பீ.கே. 27.55 கோடி இந்­திய ரூபாவை வசூ­லித்­த­மையே நத்தார் தினத்தில் மிக அதி­க­மான வசூல் சாத­னை­யாக இருந்­தது.

 

வட அமெ­ரிக்­காவில்...:


வட அம­ரிக்­காவில் (அமெ­ரிக்கா, கனடா) கடந்த வார இறு­தியில் தங்கல் திரைப்­படம் 40 லட்சம் டொலர்­க­ளுக்கும்  (27.10 கோடி இந்­திய ரூபா) அதி­க­மான தொகையை தங்கல் வசூ­லித்­தது. அப்­பி­ராந்­தி­யத்தில் திரைப்­ப­ட­மொன்று ஒரே வாரத்தில் வசூ­லித்த மிக அதிக தொகை இது­வெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

 

தங்கல் தமிழ் ட்ரெய்லர்:

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.