Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'ஸ்டார் வோர்ஸ்' புகழ் நடிகை கெரி பிஷர் 60 வயதில் மரணம்
2017-01-01 10:58:40

ஸ்டார் வோர்ஸ் திரைப்­ப­டங்­களின் மூலம் புகழ் பெற்ற ஹொலிவூட் நடிகை கெரி பிஷர் 60 வயதில் கால­மா­னமை பல­ரையும் அதிர்ச்­சி­யிலும் சோகத்­திலும் ஆழ்த்­தி­யுள்­ள­து.­

 

மா­ர­டைப்­பினால் பாதிக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டிருந்த கெரி பிஷர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உயி­ரி­ழந்தார்.

 

கெரி பிஷர் இறந்­து­விட்டார் என கடந்த வாரம் செய்தி பர­வி­யது. அது பொய்­யான செய்தி என்­பது பின்னர் உறு­தி­யா­னது. 

 

எனினும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை லண்­ட­னி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி விமா­னத்தில் பறந்­து­கொண்­டி­ருந்­த­போது கெரி பிஷ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது. விமானம் தரை­யி­றங்­கு­வ­தற்கு 15 நிமி­டங்கள் இருந்­த­போது அவர் மார­டைப்­பினால் பாதிக்­கப்­பட்டார்.

 

விமானம் தரை­யி­றங்­கி­ய­வுடன் அவர் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பப்­பட்டு தீவிர சிசிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்­று­வந்தார்.

 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை அவர் கால­மானார் என குடும்­பத்­தினர் அறி­வித்­தனர். 

 

தனது தாயா­ரான நடிகை டெபி ரெனோல்ட்ஸ் (84), மகள் பில்லி லோர்ட் (24) ஆகி­யோரை விட்டுப் பிரிந்­துள்ளார் கெரி பிஷர்.

 

தனது 19 ஆவது வயதில் ஹொலிவூட் படங்­களில் நடிக்க ஆரம்­பித்­தவர் கெரி பிஷர். 1975 ஆம் ஆண்டு வெளி­யான “சம்போ”(Shampoo) திரைப்­ப­டத்தில் அவர் ஹொலிவூட் நடி­கை­யாக அறி­மு­க­மானார். 

 

1977 ஆம் ஆண்டு வெளி­யான முத­லா­வது ஸ்டார் வோர்ஸ் திரைப்­ப­டத்தில் ஹரிசன் போர்ட், மார்க் ஹமில் சகிதம் கெரி பிஷர் நடித்தார். ஜோர்ஜ் லூகாஸ் இயக்­கிய ஸ்டார் வோர்ஸ் படம் பெரும் வெற்றி பெற்­ற­துடன் அப்­ப­டத்தில் இள­வ­ரசி லீயா எனும் பாத்­தி­ரத்தில் நடித்த கெரி பிஷரும் மிகவூம் பிர­ப­ல­மானார். 

 

 

அதன்பின் 1980 ஆண்­டு­களில் வெளி­யான 2 ஆவது ஸ்டார் வோர்ஸ் பட­மான “தி எம்­பயர் ஸ்ட்ரைக்ஸ் பெக்” 1983 இல் வெளி­யான  3 ஆவது ஸ்டார்வோர்ஸ் திரைப்­ப­ட­மான “ரிட்டர்ன் ஒவ் த ஜேடி” படங்­க­ளிலும் லீயா பாத்­தி­ரத்தில் கெரி பிஷர் நடித்தார். 

 

ஸ்டார் வோர்ஸ் (1977 படத்தில் மார்க் ஹமில், கெரி பிஷர், ஹரிசன் போர்ட்                                                            .................................................................................................................................

 

ரிட்டர்ன் ஒவ் தி ஜேடி படத்தில் கெரி பிஷர் அணிந்து நடித்த தங்க நிறத்­தி­லான உலோக நீச்­ச­லு­டையும் மிக பிர­சித்­த­மா­னது. கடந்த வருடம் அந்த நீச்­ச­லுடை 96,000 டொலர்­க­ளுக்கு ஏலத்தில் விற்­ப­னை­யா­கி­யது. 

 

கடந்த வருடம் வெளி­யான 7 ஆவது ஸ்டார் வோர்ஸ் திரைப்­ப­ட­மான தி போர்ஸ் அவேக்கன்ஸ் படத்தில் நடித்த கெரி பிஷர், 2017 டிசம்­பரில் வெளி­யா­க­வுள்ள 8 ஆவது ஸ்டார் வோர்ஸ் படத்­திலும் நடித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.