Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன் - சமந்தா
2017-01-02 21:40:57

“புத்­தாண்டில் தர­மான படங்­களில் நடிப்பேன்” என்று நடிகை சமந்தா பேட்­டி­ய­ளித்­துள்ளார். 

 

நடிகை சமந்தா அளித்த பேட்டி வரு­மாறு:-
“எனக்கு இந்த வருடம் சிறந்த படங்கள் அமைந்­தன. பாராட்­டு­களும் கிடைத்­தன. ‘தெறி’, ‘24’ ஆகிய படங்­களில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் வந்தேன். ‘தெறி’ படத்தில் நான் மரணம் அடை­வது போன்ற காட்­சியை பார்த்து பலரும் அழு­த­தாக கூறி­னார்கள்.

 

இது எனது நடிப்­புக்கு கிடைத்த விரு­தா­கவே கரு­து­கிறேன். சினி­மாவில் நான் அழ­காக இருப்­ப­தாக சொல்­கி­றார்கள்.

 

அதற்கு காரணம் ஒளிப்­ப­திவு. ஒரு நடி­கையை அழ­கா­கவும் அழ­கில்­லா­மலும் காட்­டு­வது ஒளிப்­ப­தி­வா­ளர்­கள்தான். 

 

எனக்கு மணி­ரத்­தினத்­தின் படத்தில் நடிக்க வேண்டும் என்­பது இன்னும் நிறை­வே­றாத ஆசை­யா­கவே இருக்­கி­றது.

 

அவர் படங்­களில் நடிக்க விரும்­பாத நடி­கர்-­, ந­டி­கை­களே கிடை­யாது. எனக்கும் அந்த ஆர்வம் நீண்ட நாட்­க­ளா­கவே இருக்­கி­றது.

 

ஒரு தடவை மணி­ரத்னம் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்து கைந­ழுவிப் போனது. தவிர்க்க முடி­யாத சூழ்­நி­லையால் அந்த படத்தில் நடிக்க இய­ல­வில்லை.

 

அதை நினைத்து வருத்­தப்­ப­டு­கிறேன். புத்­தாண்டில் மணி­ரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் இருக்­கிறேன்.

 

கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் உள்ள படங்­களில் நடிப்­பீர்­களா? என்று கேட்­கி­றார்கள். நல்ல கதை, கதா­பாத்­தி­ரங்கள் இருக்கும் படங்­களில் நடிக்க வேண்டும் என்­ப­துதான் எனது ஆசை. அது­போன்ற கதை­களை தெரி­வு செய்து நடித்து வரு­கிறேன்.

 

ஆனால், கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் உள்ள கதை­க­ளில்தான் நடிப்பேன் என்ற பிடி­வாதம் எதுவும் எனக்கு இல்லை. அது­போன்ற கதை­களை தேடி ஓடவும் மாட்டேன்.

 

கடந்த வருடம் 5 படங்களில் நடித்து இருக்கிறேன். புத்தாண்டிலும் தரமான கதையம்சமுள்ள படங்களில் நடிப்பேன். இவ்வாறு சமந்தா கூறினார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.