Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
எனக்கு நடிப்பு வரும்னு நினைத்துகூட பார்க்கல - ஜி.வி. பிரகாஷ்
2017-01-06 15:29:28

2006 ஆம் ஆண்டு வெளி­யான வெயில் படத்தின் மூலம் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­னவர் ஜி.வி.பிர­காஷ்­குமார். முதல்­ப­டத்­தி­லேயே உரு­குதே மரு­குதே என்­கிற ஒரே பாடலின் மூலம் கவர்ந்­தவர் இப்­போது பிஸி­யான ஹீரோ.

 

‘டார்லிங்’, ‘பென்சில்’, ‘த்ரிஷா இல்­லைனா நயன்­தாரா’, ‘எனக்கு இன்­னொரு பேர் இருக்கு’, கடவுள் இருக்கான் குமாரு என அடுத்­த­டுத்து படங்கள் வெளி­யாகி வரும் நிலையில், அடுத்து புரூஸ்லீ ரிலீ­ஸுக்குக் காத்­தி­ருக்­கிறார் ஜிவிபி.  

 

மேலும் பல படங்­களை கைவசம் வைத்­தி­ருக்­கிறார் ஜி.வி.பிரகாஷ். மறு­புறம் இசை­ய­மைப்­பா­ள­ரா­கவும் பிஸி­யாக இருக்­கிறார்.

இந்­நி­லையில், இயக்­குநர் சண்­முகம் முத்­து­சாமி இயக்­கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடங்­காதே’. திருச்­சியில் இதற்­கான படப்­பி­டிப்பு நடந்து வரும் நிலையில் படப்­பி­டிப்புக்கு இடையே அவ­ரிடம் பேசினோம்.

 

இசை­ய­மைப்­பாளர், நடிகர். இதுல எது உங்­க­ளுக்கு பிடிச்­சி­ருக்கு?
ரெண்­டுமே தான். இசை­யில எனக்கு பயிற்­சியும் அனு­ப­வமும் நிறை­யவே இருக்கு. அத­னால இசை­ய­மைப்­பா­ள­ராக இப்­போ­தைக்கு ரொம்ப மெனக்­கடத் தேவை­யில்லை. ஆனால், நடிப்பு அப்­ப­டி­யில்லை. இதில் நிறைய விஷ­யங்கள் இருக்கு. நடி­க­ராக இருக்­கிறது சவால் தான்.

 

புதுசு புதுசா நம்மை அப்டேட் பண்­ணிக்க வேண்டி இருக்கு. ஒவ்­வொரு நாளும் எதை­யா­வது கத்­துக்­கணும். அந்த வகை­யில நடிப்பு எனக்கு இப்போ நல்ல அனு­பவம்.

 

ஆரம்­பத்­துல எனக்கு நடிப்பு வரும்னு நான் நினைச்சு கூட பார்க்­கலை. ஒரு கட்­டத்­துல நடிக்­க­ணும்னு தோணுச்சு. நடிக்­க­ணும்னு முடி­வெ­டுத்­த­துக்கு அப்­புறம், ஆடு­க­ளத்­துல நடிச்ச நரேன் கிட்ட, 2 மாசம் பயிற்சி எடுத்­து­கிட்டேன்.

 

இயக்­குநர் வெற்­றி­மாறன் தான் இதற்கு ஏற்­பாடு பண்­ணினார். அது பெருசா கை கொடுத்­துச்சு. இது­மட்­டு­மல்­லாம இப்போ ஒவ்­வொரு படத்­துலயும் வேலை பார்க்கும் போதும், நடிக்க கத்­து­கிட்டே இருக்கேன்.

 

இசை­ய­மைப்­பாளர், நடிகர் ரெண்­டையும் பெலன்ஸ் பண்ண முடி­யுதா?
ம்ம்ம்... முடி­யு­துனு தான் நினைக்­கறேன். இசை­ய­மைப்­பா­ள­ராக நான் ஸ்பொட்ல இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

 

படத்­துக்கு என்ன தேவையோ, அந்த மியூஸிக் போட்டு கொடுத்­துட்டு, ஒகே வாங்­கி­டலாம். எனக்கு மியூஸிக் டீம் பெரிய பலம்.

 

அத­னால அது பிரச்சி­னையே இல்லை. ஆனால் நடிப்பு அப்­ப­டி­யில்லை. கொஞ்ச கஷ்டம் தான். இருந்­தாலும் பெலன்ஸ் பண்­ணீட்டு வர்றேன்.

 

இசை­ய­மைப்­பா­ளரா 50 படத்தை கடந்­துட்­டீங்க... இப்ப நடிக்­கவும் ஆரம்­பிச்­சுட்­டீங்க. இசை­யில முன்ன மாதிரி ஹிட்டை எதிர்­பார்க்­க­லாமா?

நிச்­ச­யமா. நான் நடிச்­சுட்டு இருக்கும் போது தான் 'தெறி' படத்­துக்கு இசை அமைச்சேன். 

 

அது ஹிட் தானே. அதே­போல, ‘காக்கா முட்டை’, ‘ஈட்டி’ உள்­ளிட்ட படங்­க­ளுக்கும் நடிச்­சு­கிட்டே தான் இசையமைச்சேன். இது இப்­ப­டியே தொடரும். நிச்­சயம் நல்ல ஹிட் கொடுப்பேன். அதுல சந்­தே­கமே வேண்டாம்.

 

நீங்க ஒரே மாதி­ரி­யான படங்­கள்ல தொடர்ந்து நடிக்­க­றதா விமர்­சனம் இருக்கே? கதைத்­தேர்­வுல இதை­யெல்லாம் கவ­னத்­துல எடுத்­துப்­பீங்­களா?
நான் நடிச்ச ‘டார்லிங்’, ‘பென்சில்’, ‘த்ரிஷா இல்­லன்னா நயன்­தாரா’ உள்­ளிட்ட படங்கள் ஹிட். இதுல நான் ஒரே மாதி­ரி­யான கெரக்­டர்ல நடிக்­கலை. ஒவ்­வொரு படத்­திலும் ஒவ்­வொரு வித­மான கெரக்­டர்­கள்ல தான் நடிச்­சி­ருக்கேன்.

 

இப்போ நான் நடிக்கும் ‘அடங்­காதே’ படம், மிகச் சிறந்த த்ரில்லர் படம். இந்த படத்­தோட இயக்­குநர் சண்­முகம், அடுத்த ராம்­கோபால் வர்மா அள­வுக்கு பேசப்­ப­டுவார். முதன் முத­லாக சீரி­யஸா ஒரு படம் பண்றேன். இது ஒரு 'கில்ட்டி ரா பிலிம்'.

 

இதுக்­காக வார­ணாசி, திருச்சி உள்­ளிட்ட முக்­கிய இடங்­கள்ல சூட்டிங் எடுத்­தி­ருக்கோம். இந்­தப்­ப­டத்­துல சரத்­குமார் சார், தம்­பி­ரா­மையா இவர்கள் கூட நடிக்­கிற சான்ஸ் கிடைச்­சி­ருக்கு,.

 

அதென்ன உங்க படங்­கள்ல ஆனந்தி, நிக்­கி­கல்­ரா­ணியே திரும்ப திரும்ப கதா­நா­ய­கியா நடிக்­க­றாங்க?
அதுக்கு நான் எதுவும் காரணம் இல்லை பாஸ். ஒரு படம் ஹிட் ஆனா, அந்த நடி­கை­யையே இயக்­கு­நர்கள் செலக்ட் பண்­றது தான் காரணம். நான் யாரையும் செலக்ட் பண்­ற­து­மில்லை. ரெக்கமெண்ட் பண்­ற­து­மில்லை.

 

மனைவி சைந்­தவி எப்­படி இருக்­காங்க?. உங்க மியூஸிக் தவிர மத்த மியூஸிக் டைரக்­டர்­கள்­கிட்ட பாடக்­கூ­டா­துனு சொல்­லீட்­டீங்­களா?

அப்­ப­டி­யெல்லாம் இல்லை. என்­னோட இசையில் அவங்க அதி­க­மாகப் பாடி­யி­ருக்­காங்க. அந்தப் பாடல்கள் ஹிட் அடிக்­கி­ற­தால இப்­படி ஒரு பார்வை வந்­தி­ருக்­கலாம். ஆனா இதுல உண்­மை­யில்லை.   ‘தெகி­டி’யில் கூட பாடி­யி­ருக்­காங்க. அந்த பாட்டு ஹிட்டும் ஆச்சு.

 

புது இயக்­கு­நர்­கள் கூடவே படம் பண்றீங்களே... பெரிய டைரக்டர்கள்கூட படம் பண்ற திட்டமிருக்கா...?

நிச்சயமா. பெரிய டைரக்டர்கள் படத்துல நடிக்கணும்னு விருப்பம் இருக்கு. அதற்கான வாய்ப்பு கிடைச்சா கட்டாயம் நடிப்பேன். 

 

இப்போதைக்கு  கைவசம் இருக்குற படங்கள்ல நடிக்கிறேன். நிச்சயம் நல்ல தமிழ்ப்படங்கள் கொடுப்பேன்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.