Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஹொலிவூட் நட்சத்திரங்களின் 2016 வசூல் பட்டியலில் நடிகர்களையும் விஞ்சி நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சன் முதலிடம்
2017-01-08 09:19:41

ஹொலி­வூட்டில் கடந்த வருடம் திரைப்­ப­டங்­களின் டிக்கெட் விற்­பனை மூலம் அதிக வசூல் செய்த நட்­சத்­தி­ர­மாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சன் அறி­விக்­கப்­பட்­டுள்ளார். 

 

ஏனைய அனைத்து நடிக நடி­க­ரையும் விட நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்த படங்கள் அதிக தொகை வசூ­லித்­துள்­ளன என போர்ப்ஸ் சஞ்­சிகை தெரி­வித்­துள்­ளது.

 

ஸ்கார்லெட் ஜொஹான்­சனின் திரைப்­ப­டங்கள் கடந்த வருடம் 120 கோடி டொலர்­களை வசூ­லித்­துள்­ள­தாக போர்ப்ஸ் சஞ்­சிகை கணித்­துள்­ளது.

 

"கெப்டன் அமெ­ரிக்கா சிவில் வோர்" படத்தில் பிளெக் விடோ எனும் பாத்­தி­ரத்தில் ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்­தி­ருந்தார்.

 

அப் ­படம் 115 கோடி டொலர்­களை வசூ­லித்­தது. ஹெய்ல் சீசர் படம் 6.3 கோடி டொலர்­களை வசூ­லித்­தது.  

 

இதன்மூலம் இப்­ பட்­டி­யலில் முத­லி­டத்தைப் பெற்­றுள்ளார் ஸ்கார்லெட் ஜொஹான்சன். 

 

"கெப்டன் அமெ­ரிக்கா சிவில் வோர்" படத்தில் நடித்த நடி­கர்கள் கிறிஸ் இவான்ஸ், ரொபர்ட் டோனி ஜூனியர் ஆகியோர் இப் ­பட்­டி­யலில் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்­து­கொண்­டுள்­ளனர்.

 

கடந்த வருடம் இவர்­களின் வேறு படங்கள் வெளியா­க­வில்லை.

 

எனி­மேஷன் திரைப்­ப­டங்­களின் வசூலை இப்­ பட்­டியல் தயா­ரிப்பில் போர்ப்ஸ் சஞ்­சிகை கருத்­திற்­கொள்­ள­வில்லை.

 

எனி­மேஷன் படங்­களும் கருத்­திற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் ஸ்கார்லெட் ஜொஹான்­சனின் படங்­களின் வசூல் தொகை மேலும் அதி­க­மாக இருந்­தி­ருக்கும்.

 

ஜங்கிள் புக் எனும் எனி­மேஷன் படத்­துக்கு அவர் குரல் கொடுத்­தி­ருந்தார்.

 

அப்­ படம் உல­கா­விய ரீதியில் 96.6 கோடி டொலர்­களை வசூ­லித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.