Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மரியா கெரியின் புத்தாண்டு இசைநிகழ்ச்சி கோளாறுக்கு ஏற்பாட்டாளர்களை குற்றம் சுமத்துகிறார் முகாமையாளர்
2017-01-08 09:31:50

அமெரிக்காவின் பிரபல பாடகி மரியா கெரி, புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, நியூயோர்க்கில் நடத்திய இசை நிகழ்ச்சியின்போது, வெறுமனே வாயசைத்து சர்ச்சையில் சிக்கியமைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என  மரியா கெரியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

 

நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தின்போது, பாடல்களைப் பாடுவதற்கு அழைக்கப்பட்டிருந்த 47 வயதான பாடகி மரியா கெரி, நேரடியாக மேடையில் பாடவில்லை. ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட பாடலுக்கு அவர் வாயசைத்துக் கொண்டிருந்தார். 

 

இதன்போது, மேற்படி பாடல் அவருக்கு சரியாக கேட்காததால், வாயசைப்பதற்கும் சிரமப்பட்டு திணறி நின்றார் மரியா கெரி. இதனால், அவர் வெறுமனே வாயசைத்தமை அம்பலமாகியதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

 

மேற்படி நிகழ்ச்சியை நேரடியாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மில்லியன் கணக்கானோர் பார்வை யிட்டனர். 

 

கிரமி விருது வென்ற பாடகியான மரியா கெரி, இவ்வாறு நெருக்கடியை எதிர்கொள்வதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான டிக் கிளார்க் ப்ரொடெக் ஷன் எனும் நிறுவனமே காரணம் என மரியாவின் முகாமையாளர் ஸ்டெலா புலோசினிகோவ்  குற்றம் சுமத்தியுள்ளார். 

 

அந்நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே, மரியா கெரியின் இயர்போன் சரியாக இயங்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

 

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இயர்போன் பற்றரியை மாற்றினார்கள். ஆனால், அதன் பின்னரும் இயர்போன் இயங்கவில்லை.

 

மீண்டும் நாம் இது குறித்து அறிவித்தோம். நேரடி நிகழ்ச்சி ஆரம்பாகும் போது இக்குறைபாட்டை சீராக்குவதாக அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அது நடக்கவில்லை என்பது குறித்து அக்கறை செலுத்தவில்லை எனவும் ஸ்டெலா தெரிவித்துள்ளார். 

 

இந்த நிகழ்ச்சி கலைஞர்களுக்கு நட்பான வகையில் இருக்கவில்லை. குறிப்பாக, புத்தாண்டுப் பரிசாக தனது விடுமுறையை துண்டித்துக்கொண்டு வந்த ஒரு கலைஞருக்கு இது நட்பான வகையில் இருக்கவில்லை" என ஸ்டெலா புலோசினிகோவ் தெரிவித்துள்ளார்.

 

தொலைக்காட்சி டி.சி.பி. ரேட்டிங்கை அதிகரித்துககொள்வதற்காக இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர். இதற்காக மரியா கெரியிடம் மன்னிப்பு கோரப்பட வேண்டும் எனவும் ஸ்டெலா கூறியுள்ளார். 

 

ஆனால், டிக் கிளார்க் ப்ரொடெக் ஷன் நிறுவனம் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. 

 

"சுமார் 50 வருடங்களாக நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்கள் என்ற வகையில், கலைஞர்களுடனான எமது நீண்டகால உறவு குறித்து நாம் பெருமையடைகிறோம்.

 

அமெரிக்கன் மியூசிக் அவார்ட்ஸ், பில்போர்ட் மியூசிக் அவார்ட்ஸ், நியூ இயர் ரொக்கின் உட்பட பல இசை நிகழ்ச்சிகளை தயாரிப்பவர்கள் என்ற வகையில், டி.சி.பி. ரேட்டிங் குக்காக கலைஞர்களின் வெற்றியை நாம் வேண்டு மென்றே சமரசம் செய்துகொள்வோம் என்று கூறு வது அபகீர்த்தியானதும் அபத்தமானதாகும்" என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.