Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ரஜினி ஸ்டைலில் கலக்கிய விஜய்
2017-01-09 20:27:00

பரதன் இயக்­கத்தில் விஜய் நடித்­துள்ள ‘பைரவா’ படம் ஜன­வரி 12 ஆம் திக­தி திரைக்கு வரு­கி­றது. இந்த படத்தை ஆரம்­பிக்­கும்­போதே பொங்கல் ரிலீஸ் என்று அறி­வித்து விட்­டனர்.

 

அதேபோல் தற்­போது அட்லீ இயக்­கத்தில் விஜய் நடிக்கும் 61 ஆவது படம் 2017- ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திக­தி திரைக்கு வர இருப்­ப­தாக அறி­வித்தே பட­வே­லை­களை தொடங்­கி­யுள்­ளனர்.

 

ஆக, இந்த ஆண்டு விஜய் நடிப்பில் 2 படங்கள் திரைக்கு வரு­கி­ன்ற­­ன.

 

மேலும், ‘பைரவா’ படத்தில் இரண்டு வேடங்­களில் நடித்­துள்ள விஜய், நக­ரத்து கெட்­டப்பில் தலையில் விக் வைத்து நடித்­துள்ளார்.

 

அந்த கத­பாத்­தி­ரத்தை வித்தியா­சப்­ப­டுத்தி காட்ட வேண்­டும் என்­ப­தோடு, சில ஜாலி­யான மற்றும் ஆவே­ச­மான காட்­சி­களில் அவ்­வப்­போது தனது தலை­மு­டியை விஜய் கோதி விடு­வது போன்ற காட்­சி­களும் பைர­வாவில் இடம்­பெற்­றுள்­ளதாம்.

 

குறிப்­பாக, சண்டை காட்­சி­களில் ரஜினி ஸ்டைலில் முடியை கோதி விட்­ட­படி கலக்கல் செய்­தி­ருக்­கி­றாராம் விஜய். அந்த காட்­சிகள் தியேட்டரில் பெரிய அளவில் கைதட்டல் பெறும் என்கிறது பைரவா யூனிட்.

 

பைரவா படம், 100 கோடி ரூபா வசூலை குறிவைப்பதால், பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 

பொங்கலுக்கு, இரு நாட்களுக்கு முன்  12 ஆம் திகதி படத்தை வெளியிடவும், ரசிகர் மன்றம் மூலம், அதிக கட்டணம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.