Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பெப்ரவாியில் வெளியாகும் 'புரூஸ் லீ'
2017-01-09 21:42:04

ஜி.வி.பிரகாஷ், கிர்த்தி கர்பந்தா மற்றும் பலர் நடித்த 'புரூஸ் லீ' படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பட வெளியீட்டை பெப்­ர­வ­ரி மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்கள்.

 

ஜி.வி.பிரகாஷ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படங்கள் ஒன்று கூட வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

 

அதனால், 'புரூஸ் லீ' படத்திற்கு வியாபார ரீதியாக வரவேற்பு இல்லையாம்.

 

மேலும், பொங்கலுக்கு 'பைரவா' படம் வெளிவருவதால் அந்தப் படத்துடன் போட்டி போட்டு வசூலைப் பெற முடியாது என விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தயக்கம் காட்டியிருக்கிறார்கள்.

 

அதனால், படத்திற்கு மிகக் குறைவான விலையை நிர்ணயித்தார்களாம். படத் தயாரிப்புச் செலவை விட அவர்கள் கேட்ட தொகை குறைவாக இருந்ததால் இப்போதைக்கு படத்தை வெளியிடுவதை தயாரிப்பு நிறுவனத்தினர் தள்ளி வைத்துவிட்டார்களாம்.

 

ஜனவரி 26 வெளியிடலாம் என நினைத்தால் அன்று 'எஸ் 3, சிவலிங்கா' ஆகிய படங்கள் ஏற்கெனவே தியேட்டர்களை புக் செய்து வைத்துள்ளதால் அன்றும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

கடைசியில் வேறு வழியில்லாமல் பெப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இதற்கான அறிவிப்பை படக்குழுவே போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.