Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
30 கோடி ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரஷ்ய அமைச்சர் கைது!
2016-11-17 15:16:34

ரஷ்யாவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அலெக்ஸி உல்யுகயேவ் 20 இலட்சம் டொலர் (சுமார் 30 கோடி ரூபா) லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அலெக்ஸி உல்யுகயேவ்


 

அவரை வீட்டுக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைவடைந்த பின்னர், லஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவின் மிக உயர் பதவியிலுள்ள அரசியல்வாதி அலெக்ஸி உல்யுகயேவ் ஆவார்.

 

ரஷ்ய புலனாய்வுப் பிரிவான எவ்.எஸ்.பீ.யினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து 62 வயதான அலெக்ஸி உல்யுகயேவ் திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டார் என எவ்.எஸ்.பீயின் விசாரணைக் குழு செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

 

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது...


 

ரஷ்ய அரச கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனமான ரொஸ்நெவ்ட் (Rosneft), மற்றொரு அரச எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாஷ்நெவ்ட்டின் (Bashnef) பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவிப்பதற்காக 20 இலட்சம் டொலர் லஞ்சம் பெற்றார் என அலெக்ஸி உல்யுகவே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

2000 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்ய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அலெக்ஸி உல்யுகயேவ், 2013 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்ய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார்.

 

 

ரஷ்ய பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் அழுத்தம் அதிகரிப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர் இவர். பாஷ்நெவ்ட் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை ரொஸ்நெவ்ட் நிறுவனம் வாங்குவதற்கு முயன்றபோது அலெக்ஸி உல்யுகயேவ் ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

 

அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்று தனியார் மயப்படுத்தல் நடவடிக்கை யொன்றில் பங்குபற்றுவது பிழையானது என அவர் கூறினார். எனினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மேற்படி நிறுவனங்களின் ஒப்பந்ததத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

 

நீதி மன்றத்தில்...


 

இப் பின்னணியிலேயே அமைச்சர் அலெக்ஸி உல்யுகயேவ் மேற்படி ஒப்பந் தத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக 20 இலட்சம் டொலர் லஞ்சம் வாங்கினார் என அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

நவம்பர் 14 ஆம் திகதி 20 இலட்சம் டொலர் லஞ்சம் பெற்றபோது அலெக்ஸி உல்யுகயேவ் அகப்பட்டுக் கொண்டார் என எவ்.எஸ்.பீ விசாரணைக்குழுவைச் சேரந்த ஸ்வெட்லானா பெட்ரென்கோ தெரவித்துள்ளார்.

 

 

பல மாதங்களாக தொலைபேசி உரையாடல் பதிவுகள் உட்பட இலத்திரனியல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே இக் கைது இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

2014ஆம் ஆண்டில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் அமைச்சர் உல்யுகயேவ்


 

 

இவ் விசாரணைகளின் நிலைமை குறித்து ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எவ்.எஸ்.பி. தெரிவித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், தன் மீதான குற்றச்சாட்டை அலெக்ஸி உல்யுகயேவ் மறுத்துள்ளார்.

 

இக் கைது நடவடிக்கையானது அபத்தமானது எனவும் அடக்குமுறை எனவும் அவர் விமர்சித்துள்ளார். அலெக்ஸி உல்யுகயேவை ஜனவரி 15 ஆம் திகதி வரை வீட்டுக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.