Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
திருமண வைபவத்தில் விருந்தினரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இந்திய பெண் சாமியார் சரணடைந்தார்!
2016-11-21 17:09:36

திரு­மண வைப­வ­மொன்­றின்­போது,  துப்­பாக்கி வேட்­டுக்­களை வான் நோக்கி சுட முயன்று ஒருவர் உயி­ரி­ழப்­ப­தற்கு கார­ண­மானார் எனக் கூறப்­படும் இந்­திய பெண் சாமி­யா­ரான சாத்வி தேவா தாக்கூர் 3 நாட்­கள் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த பின்னர் நீதி­மன்றத்தில் சர­ண­டைந்­துள்ளார்.

 

 

27 வய­தான சாத்வி, பொன் ஆப­ர­ணங்கள் மற்றும் துப்­பாக்கி விரும்­பி­யென வர்­ணிக்­கப்­ப­டு­கிறார். தலை­ முதல் கால்­ வரை ஆப­ர­ணங்­களை அணியும் சாத்வி தேவா தாக்கூர் துப்­பாக்­கியால் சுடு­வ­திலும் ஆர்வம் கொண்­டவர்.

 

இந்­நி­லையில், ஹரி­யானா மாநி­லத்தில் கடந்த செவ்­வாய்க் ­கி­ழமை நடை­பெற்ற திரு­மண வைப­வ­மொன்­றி­ன்போது, கொண்­டா­ட்டத்தில் ஈடு­பட்ட சாத்வி தேவா, துப்­பாக்­கியால் சுட்டார்.

 

 

இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோவில், சாத்வி தேவ தாக்கூர் முதலில் ரிவோல்­வ­ராலும் பின்னர் இரட்டைக் குழல் துப்­பாக்­கி­யாலும் சுடு­வது பதி­வா­கி­யுள்­ளது.

 

அவ­ரோடு சேர்ந்து அவ­ரு­டைய சில பாது­காப்பு பணி­யா­ளர்­களும் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தனர். 'புனிதப் பெண்' அல்­லது 'பெண் கடவுள்' என்று பொருள்­படும் சாத்வி என்ற இந்தி மொழி சொல்லை தனது பெய­ரோடு இணைத்­தி­ருக்கும் சாத்வி தேவ தாக்கூர், நடன மேடைக்கு சென்று, அவர் விரும்­பு­கிற ஒரு பாடலை ஒலிக்­க­விட கேட்டு நட­ன­மாடி, திரு­ம­ணத்தில் கலந்து கொண்ட விருந்­தி­னரை பிர­மிக்க வைத்­த­தாக இந்­திய ஊட­கங்கள் கூறின.

 

 

அனை­வரும் சூழ்ந்­தி­ருக்கும் வேளையில் துப்­பாக்­கிச்­சூடு நடத்த தொடங்கி அனை­வ­ரையும் அவர் பீதி அடைய செய்­தி­ருக்­கிறார்.

 

மண­மகன் மற்றும் மண­ம­களின் தரப்­பினர் துப்பாக்கிச் சூட்டை  நிறுத்­துமாறு அவரை கேட்­டு­கொண்­டமை செவிடன் காதில் ஊதிய சங்­காகிப் போனது.

 

தவ­று­த­லாக சுடப்­பட்ட துப்­பாக்கித் தோட்டா மண­ம­களின் உற­வி­ன­ரான 50 வயது பெண்ணை தாக்கியதில் அவர் கீழே சரிந்­த­துடன், மூன்று உற­வினர்கள் படு­கா­ய­முற்ற பின்னர் தான் இந்த துப்­பாக்­கிச்  சூ­டுகள் ஓய்ந்­தன.

 

அப்­போது உரு­வான குழப்­பத்தில் சாத்­வியும் அவ­ரின் ஆறு பாது­காப்பு பணி­யா­ளர்­களும் தப்­பி­யோ­டினர்.

 

நீதி­மன்­றத்தில் சரண்


அவர்கள் ஏழு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்­தி­ருக்கும் ஹரி­யானா பொலிஸார். அவர்­களை பிடிக்க தேடி வந்­தனர்.

 

இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்த சாமியார் நீதிவான் நீதி­மன்றம் ஒன்றில் சர­ண­டைந்தார்.

 

அவரை 5 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்க நீதி­மன்றம்  உத்­த­ர­விட்­டது. அவ­ரது மெய்க்­காப்­பா­ளர்கள் இன்னும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. 'நான் நிர­ப­ராதி, நான் எந்தத் தவ­றையும் செய்­ய­வில்லை.

 

இது எனக்­கெ­தி­ராக போடப்­பட்ட சதி', என சர­ண­டைந்தபின்னர் செய்­தி­யா­ளர்­
க­ளிடம் சாத்வி கூறினார். 'இந்த நிகழ்வில் ஒருவர் இறந்­து­விட்டார் என்­பது குறித்து நான் மிகவும் வருந்­து­கிறேன்', என்றார் சாத்வி.

 

சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துகள்


அனைத்­திந்­திய இந்து மகா­சபை என்ற சிறி­ய­தொரு இந்து மத நிறு­வ­னத்­துக்கு துணைத் தலை­வ­ராக இருக்கும் சாத்வி தாக்குர், இவ்­வாறு சர்ச்­சைக்­கு­ரிய வகையில் செய்­தி­களில் அடி­ப­டு­வது இது முதல்­மு­றை­யல்ல.

 

முஸ்லிம் மற்றும் கிறித்­தவ மக்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு, அவர்­களை மல­டாக்க வேண்டும் என கூறி­யது தொடர்­பாக கடந்த ஆண்டு காவல்­துறை அவர் மீது வழக்கு பதிவு செய்­தி­ருந்­தது.

 

 

அதே­வேளை, இந்­தி­யாவில் சிறு­பான்­மை­யி­னரின் மத­மாக மாறு­கின்ற அச்­சு­றுத்­தலை தடுக்கும் வகையில், இந்து மதப் பெண்கள் அதிக குழந்­தை­களை பெற்­று­க்கொள்ள வேண்டும் என்­கிற இந்து மத தேசி­ய­வாத தலை­வர்­களின் பரிந்­து­ரை­களை ஏற்­று­கொள்­வ­தாக சாத்வி தேவா­ தெ­ரி­வித்­தி­ருந்தார்.

 

கோட்­சேக்கு சிலை வேண்டும் என்­றவர்


அத்­துடன் இந்­திய தேச­பிதா மகாத்மா காந்­தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்­ஸேவின் சிலை ஒன்று ஹரி­யா­னாவில் நிறு­வப்­பட வேண்டும் என்றும் அவர் கூறி­யுள்­ள­தாக இந்­திய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

 

கர்னால் மாவட்­டத்­தி­லுள்ள ஒரு சிறிய கிரா­ம­மான பிராஸில், சாத்வி  பிறந்து வளர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னால், அக் கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவியிருக் கிறார். அவரை பின்பற்றும் சிலரில் பெரும்பாலானோர் உள்ளூர் கிராமவாசிகளாவர்.

 

நவீன வாழ்க்கைப் பாணியால் பிரபலத்தை தேடுபவராக சாத்வி அறியப்படுகிறார் என்று உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

 

(மூலம்: பிபிசி)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.