Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
6 முதல் 13 வயதுவரை குதிரை போன்று வாழ்ந்தேன் - பிரிட்டனின் பிரபல நடிகரின் மகள் கேட் ஹவோர்ட் கூறுகிறார்
2016-11-22 18:09:09

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 6 வயதிலிருந்து 13 வயதுவரை குதிரையொன்றைப் போல் வாழ்ந்ததாகத் தெரிவித் துள்ளார்.

 

 

கேட் ஹவோர்ட் எனும் இப் பெண்ணுக்கு தற்போது 47 வயது. இங்கிலா ந்தின் வைல்ட்ஷயர் பிராந்தியத்திலுள்ள சிப்பென்ஹாம் நகரில் இவர் வசிக்கிறார்.

 

இவர், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் கொன்ராட் பிலிப்ஸின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. (கடந்த ஜனவரி மாதம் தனது 90 ஆவது வயதில் நடிகர் கொன்ராட் பிலிப்ஸ் காலமானார்).

 

 

தனது இளமைப் பருவத்தில் தான் ஒரு குதிரையென நம்பியதாகவும் இதனால், குதிரையைப் போன்றே தான் வாழ்க்கை நடத்தியாகவும் கேட் ஹவோர்ட் தெரிவித்துள்ளார்.

 

 

6 வயதிலிருந்து 13 வயதுவரை, தனது கைகளையும் முன்னங்கால் களைப் போன்று பயன்படுத்தி, குதிரை நடப்பதைப் போன்று கேட் ஹவோர்ட் நடந்து திரிந்தாராம்.

 

குதிரை போன்று கடிவாளத்தையும் அணிந்து கொண்ட இவர், புற்களை உண்ணும் வழக்கத்தைக் கூட கொண்டிருந்ததாக கூறுகிறார்.

 

 

சிறு பருவத்திலேயே குதிரையோட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தவர் கேட் ஹவோர்ட். குதிரையோட்டப் பயிற்சியில் ஈடுபடுவது அவரின் அன்றாட நடவடிக்கையாக இருந்தது.  

 

 

பாடசாலையில் 4 குதிரையோட்டப் போட்டிகளிலும் கேட் ஹவோர்ட் முதலிடம் பெற்று, ஒரு கட்டத்தில் 32 சாதனைகளை நிகழ்த்தியிருந்த வேளையிலேயே தானும் ஒரு குதிரை என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித் துள்ளார்.

 

'குதிரையொன்றின் ஆவி என்னுள் புகுந்ததைப் போல் நான் உணர் ந்தேன். நான் மிக  சக்திவாய்ந்தவளாகவும் சுதந்திரமான வளாகவும் உணர்ந்தேன்' என்கிறார் கேட் ஹவோர்ட்.

 

 

அந்தக் கணத்திலிருந்து நான் நான்கு அவயவங்களால் நடக்க ஆரம்பித்தேன். முடிந்தவரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் குதிரையாகப் பாசாங்கு செய்தேன்.

 

எனது தந்தையின் மரக்கறித் தோட்டத்துக்குச் சென்று ப்றோகோலி பூக்கள் போன்றவற்றை நான் உட்கொண்டமையும் எனக்கு நினைவில் உள்ளது. சில வேளை, இலைகுழைகளையும் சிறிதளவு உட்கொண்டேன்.

 

அவற்றை உட்கொள்வது மிகக் கடினமாக இருந்தது. சிலவேளை, இரவு உணவை உட்கொள்ளும்போது எனது பெற்றோர் பார்க்காத வேளையில் குதிரை போன்று உண்ண முயன்றேன்.

 

சில தடவைகள் நான் இதில் அகப்பட்டுக் கொண்டேன். பழைய தக்கைகளினால் குதிரை லாடம் போன்று பாதணியையும் செய்து கொண்டேன்' என கேட் ஹவோர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், தன்னை முழுமையான ஒரு குதிரை என தான் ஒருபோதும் எண்ணவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

13 ஆவது வயதில் தனது தந்தை கொன்ராட் பிலிப்ஸின் முயற்சியினால், தான் குதிரை என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டதாக கேட் ஹவோர்ட் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.