Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'11 முதல் 15 வயதுவரை கால்பந்து பயிற்றுநரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்' - இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட நட்சத்திரம் போல் ஸ்டுவர்ட் தெரிவிப்பு
2016-11-24 14:52:07

இங்­கி­லாந்தின் பிர­பல முன்னாள் கால்­பந்­தாட்ட வீரர்­களில் ஒரு­வ­ரான போல் ஸ்டுவர்ட், தனது சிறு பரு­வத்தில் கால்­பந்­தாட்டப் பயிற்­றுநர் ஒரு­வரால் 4 வருட காலம் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

 

போல் ஸ்டுவர்ட்


 

1981 முதல் 2000 ஆம் ஆண்­டு ­வரை இங்­கி­லாந்தின் புகழ்­பெற்ற கால்­பந்­தாட்டக் கழ­கங்­களின் சார்பில் விளை­யா­டி­யவர் போல் ஸ்டுவர்ட். மன்­செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், டொட்­டன்ஹாம் ஹொட்ஸ்புர் ஆகி­ய­னவும் இக்­ க­ழ­கங்­களில் அடங்கும்.

 

கழக மட்­டத்தில் 559 போட்­டி­களில் பங்­கு­பற்றி 139 கோல்­களை அவர் புகுத்­தினார். 1991 ஆம் ஆண்டு அவர் விளை­யா­டிய டொட்­டன்ஹாம் ஹொட்ஸ்புர் கழகம் ஏ.எவ். கிண்­ணத்தை கைப்­பற்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

போல் ஸ்டுவர்ட்


 

1990களின் முற்­ப­கு­தியில் இங்­கி­லாந்து தேசிய அணி சார்­பிலும் 3 போட்­டி­களில் அவர் விளை­யா­டினார். தற்­போது அவ­ருக்கு 52 வயது. இந்­நி­லையில், இளம் கால்­பந்­தாட்ட வீர­ராக தான் இருந்­த­போது பயிற்­று­நரால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டதை நேற்று முன்­தினம் பகி­ரங்­க­மாக்­கினார் போல் ஸ்டுவர்ட்.

 

தனது 11 வய­தி­லி­ருந்து 15 வயது வரை 4 வரு­டங்கள் தான் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­பட்­ட­தாக அவர் தெரி­வித்தார். இங்­கி­லாந்தைச் சேர்ந்த மற்­றொரு முன்னாள் கால்­பந்­தாட்ட வீர­ரான அன்டி வூட்வார்ட், தனது இளமைக் காலத்தில் குரூ அலெக்­ஸாண்ட்ரா கழ­கத்தின் கனிஷ்ட வீர­ராக தான் இருந்­த­போது அக்­ க­ழ­கத்தின் கனிஷ்ட அணியின் பயிற்­றுநர் பெரி பென்னெல் தன்னை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துகு உட்­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

 

1991 இல் ஏ.எவ்.ஏ. கிண்ணத்துடன் போல் ஸ்டுவர்ட்


 

பெரி பென்னல் ஏற்­கெ­னவே வேறு பாலியல் குற்­றச்­சாட்­டு­களின் கார­ண­மாக சிறையில் அடைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில், தற்­போது 43 வய­தான அன்டி வூட்­வார்ட்டின் கதையை தான் வாசித்­த­தை­ய­டுத்து, தன் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பாலியல் துஷ்­பி­ர­யோகம் குறித்தும் அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தற்கு தான் தீர்­மா­னித்­தாக போல் ஸ்டுவர்ட் கூறி­யுள்ளார்.

 

தான் 11 வயது சிறு­வ­னாக இருந்­த­போது, தன்னை எதிர்­கா­லத்தில் ஒரு கால்­பந்­தாட்ட நட்­சத்­தி­ர­மாக்­கு­வ­தாக மேற்­படி பயிற்­றுநர் வாக்­கு­றுதி அளித்தார் எனவும் அதன் பின்னர் தன்­னிடம் அவர் முறை­கே­டாக நடந்து கொண்டார் எனவும் போல் ஸ்டுவர்ட் தெரி­வித்­துள்ளார்.

 

அன்டி வூட்வார்ட்


 

'ஒருநாள் காரில் சென்று கொண்­டி­ருந்த போது அவர் என்னை தொட்டார். எனக்கு மரண பயம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன செய்­வ­தெனத் தெரி­ய­வில்லை. எனது பெற்­றோ­ரிடம் கூறு­வ­தற்கு முயன்றேன்.

 

ஆனால், அப்­போது எனக்கு 11 வய­து தான். அப்­போ­தி­ருந்து அவர் என்னை படிப்­ப­டி­யாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தினார். இதுகுறித்து எவ­ரி­டமும் கூறினால் எனது தாய், தந்தை மற்றும் இரு சகோ­த­ரர்­களை கொன்­று­விடப் போவ­தாக அவர் அச்­சு­றுத்­தினார்.

 

போல் ஸ்டுவர்ட், பெரி பென்னஸ் (இடமிருந்து வலம்)


 

11 வயது சிறு­வ­னான நான் இதை நம்­பினேன். இப்­ பா­லியல் துஷ்­பி­ர­யோ­கத்­தினால் ஏற்­பட்ட மனப் பாதிப்பு என்னை மது மற்றும் போதைப்­பொருள் பாவ­னை க்கும் இட்டுச் சென்­றது.

 

இத்­ துஷ்­பி­ர­யோ­கங்கள் மேலும் மேலும் மோச­ம­டைந்து சென்­றன' என போல் ஸ்டுவர்ட் கூறி­யுள்ளார். இங்­கி­லாந்தின் முன்னாள் கால்­பந்­தாட்ட வீரர்கள் இரு­வ­ரான அன்டி வூட்வார்ட் மற்றும் அவரின் அணி சகா­வான ஸ்டீவ் வோல்ட்டர்ஸ் ஆகியோர் தமது இள­மைக்­கால பயிற்­றுநர் பெரி பென்­ன­லினால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­பட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

6 சிறு­வர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யமை உட்­பட 23 குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்ட பெரி பென்­ன­லுக்கு 1998 ஆம் ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

அவர் 9 வருடங்கள் சிறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது வர்த்தகராகவுள்ள போல் ஸ்டுவர்ட், அன்டி வூட்வார்ட்டின் கதையை வாசித்த பின்னர் தான் எதிர்கொண்ட அவலங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இது போன்று மேலும் பலர் தமது இன்னல்களை வெளிப்படுத்த முன்வரக்கூடும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.