Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாகிஸ்தான் நடிகை கிஸ்மத் பெய்க் சுட்டுக் கொலை!
2016-11-29 15:08:37

பாகிஸ்­தானின் பிர­பல மேடை நடி­கை­களில் ஒரு­வ­ரான கிஸ்மத் பெய்க் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளார். பாகிஸ்­தானின் லாகூர் நகரில் கடந்த வியா­ழ­னன்று இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. 

 

 

இச்­ சம்­பவம் தொடர்­பாக நால்வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்­கிளில் வந்த நபர்கள், நடிகை கிஸ்மா பெய்க் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

 

8 தட­வைகள் கிஸ்மா பெய்க் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டது. இதனால், கிஸ்மா பெய்க்கின் வயிறு, கைகள், கால்­களில் காயங்கள் ஏற்­பட்­டன.

 

இச் ­சம்­ப­வத்­தை­ய­டுத்து கிஸ்மா பெய்க், வைத்­தி­ய­சா­லையொன்றின் அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக பொலிஸ் அத்­தி­யட்­சகர் தாஹிர் ரெஹ்மான் தெரி­வித்தார்.

 

 

எனினும், கிஸ்மா பெய்க்கின் உயிரை காப்­பாற்ற முடி­ய­வில்லை. லாகூரில் நடை­பெற்ற மேடை நாட­க­மொன்றில் கிஸ்மா பெய்க் நடித்த பின்னர், காரில் தனது வீட்டை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­த போது அவரின் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தப்­பட்­டது.

 

அவரின் பிரத்­தி­யேக உத­வி­யாளர் மற்றும் சார­தியும் இச்­ சம்­ப­வத்தில் காய­ம­டைந்­தனர். எனினும், அவர்­களின் நிலை ஆபத்­தா­ன­­தாக இல்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

'உம்மால் மீண்டும் நட­ன­மாட முடி­யாமல் செய்வோம்' என ஆயு­த­பா­ணிகள் சத்­த­மிட்ட பின்னர் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­தாக நடிகை கிஸ்மத் பெய்க்கின் செய­லாளர் அலி பட் தெரி­வி­த்தார் என செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

 

 

இச்­ சம்­ப­வத்­தை­ய­டுத்து, விசா­ரணை மேற்­கொண்ட பொலிஸார் நால்­வரைக் கைது செய்­துள்­ளனர். கிஸ்மத் பெய்க்கின் தாயா­ரிடம் வாக்­கு­ மூலம் பெற்­ற­துடன், கிஸ்­மத்தின் பெய்க்கின் முன்னாள் கணவர் ரானா முஸம்மில், சக நடி­க­ரான மன்சூர் மற்றும் நண்பர் ஒரு­வ­ரிடம் விசா­ரணை நடத்­தி­ய­தா­கவும் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

 

நடிகை கிஸ்மத் பெய்­க்குக்கு எதி­ராக இதற்கு முன்­னரும் இரு தட­வைகள் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. எனினும், அச் ­சம்­ப­வங்­களில் அவர் காய­மின்றி தப்­பி­யி­ருந்தார்.

 

லாகூரில் நடை­பெற்ற, கிஸ்மத் பெய்க்கின் இறு­திச் ­ச­டங்கில்  பெரும் எண்­ணிக்­கை­யான கலை­ஞர்கள் பங்­கு­பற்­றினர். கிஸ்மத் பெய்க் கொலை செய்­யப்­பட்­டமை பாகிஸ்­தா­னி­லுள்ள கலை­ஞர்கள் அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது என பாகிஸ்தான் ஊட­கங்கள் தெரி­வித்துள்ளன. 

 

 

இச் ­சம்­ப­வத்­தை­ய­டுத்து சில தினங்கள் நாடகம் எதுவும் அரங்­கேற்­றப்­ப­ட­வில்லை. இக்­ கொ­லைக்கு எதி­ராக கலை­ஞர்கள் பலர் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர்.

 

பாகிஸ்­தானில் மேடைக் கலை­ஞர்கள் சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­வது இது முதல் தட­வை­யல்ல. நகு, நத்ரா, யஸ்மின், நகினா, நைனா, மார்வி, கரிஷ்மா, சன்கம், அர்ஸோ உட்­பட பல கலை­ஞர்கள் இவ்­வாறு கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

நாடகமொன்றில்...


 

இவ் வருட முற்பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநரான குஃபியா எனும் யுவதி, இனந்தெரியாத நபர் ஒருவர் ரசிகராக நடித்து வழங்கிய ஐஸ் கிறீமை உட்கொண்டதால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.