Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்கவின் பிறந்த தினம் இன்று
2016-12-01 10:41:47

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க இன்று  தனது 52 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

 

1982 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டியில் 18 வயது பாடசாலை மாணவனாக இருந்த அர்ஜூன ரணதுங்கவும் பங்குபற்றினார். இங்கிலாந்துடனான அப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அர்ஜூன அரைச்சதம் (54) குவித்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் சார்பில் 93 டெஸ்ட் போட்டிகளில் 5105 ஓட்டங்க ளையும் 269 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்  7456 ஓட்டங்களையும் குவித்த அர்ஜூன டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 79 விக்கெட்களையும் வீழ்த்தினார்.


1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி சம்பியனாகியதில் அர்ஜூனவின் தலைமைத்துவமும் துடுப்பாட்ட மும் முக்கிய பங்குவகித்தன.


1999 உலக கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர், 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அரசியலில் ஈடுபட்ட அவர் தற்போது துறை முகங்கள், கப்பல் துறை அமைச்சராக விளங்குகிறார்

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.