Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
லண்டன் நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய அடாமா பரோவ் காம்பியாவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு
2016-12-06 16:06:20

காம்­பியா நாட்டின் புதிய ஜனா­தி­ப­தி­யாக அடாமா பரோவ் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இவர் பிரித்­தா­னிய நிறு­வ­ன­மொன்றில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக தொழில்­பு­ரிந்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

அடாமா பரோவ்


 

இவ்­வா­றான பின்­னணி கொண்ட அடாமா பரோவ், காம்­பி­யாவில் 22 வரு­ட­காலம் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த யெஹ்யா ஜெம்­மேவை தேர்­தலில் தோற்­க­டித்து அதிர்ச்­சி­ய­ளித்­துள்ளார்.

 

ஆபி­ரிக்கக் கண்­டத்தின் மேற்குப் பகு­தியில் உள்ள சிறிய நாடு காம்­பியா. இதன் பெரும்­பா­லான பகுதி சென­க­லினால் சூழப்­பட்­டுள்­ளது. சுமார் 10689 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவு கொண்ட காம்­பி­யாவில் சுமார் 18 இலட்சம் மக்கள் வசிக்­கின்­றனர்.

 

அடாமா பரோவ்


 

அந்­நாட்டின் தற்­போ­தைய ஜனா­தி­பதி யெஹ்யே ஜெம்மே. இரா­ணுவ அதி­கா­ரி­யாக பணி­யாற்­றிய யெஹ்யே ஜெம்மே 1994 ஆம் ஆண்டு இரா­ணுவப் புரட்­சியின் மூலம் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

அதன்பின் தனது பிடியை இறுக்­கிய யெஹ்யே ஜெம்மே 1996, 2006, 2011 ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் தொடர்ச்­சி­யாக 3 தட­வைகள் வெற்றி பெற்றார்.

 

தற்போதைய ஜனாதிபதி யெஹ்யே ஜெம்மே


 

கடந்த 22 வரு­டங்­க­ளாக பத­வி­யி­லுள்ள யெஹ்யே ஜெம்­மேவை தோற்­க­டிக்க முடி­யாது என்றே பலர் எண்­ணினர். ஆனால், கடந்த முதலாம் திகதி நடை­பெற்ற காம்­பிய ஜனா­தி­பதித் தேர்­தலில் யெஹ்யே ஜெம்­மே­வுக்கு 36.6 சத­வீத வாக்­கு­களே கிடைத்­தன.

 

 

எதிர்க்­கட்சி கூட்­ட­ணியின் சார்பில் போட்­டி­யிட்ட அடாமா பரோவ் 45.5 சத­வீத வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­யீட்­டினார்.

 

 

அதை­ய­டுத்து கவ­லை­யுடன் தனது தோல்­வியை ஒப்­புக்­கொள்­வ­தாக 51 வய­தான ஜனா­தி­பதி யெஹ்யே ஜெம்மே அறி­வித்தார்.

 

புதிய ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கி­யுள்ள அடாமா பரோவும் 51 வய­தா­ன­வர் தான்.

 

இவர் மன்­கமாங் குண்டா எனும் சிறிய கிரா­ம­மொன்றில் பிறந்­தவர்.

 

இடை­நிலைக் கல்­வியை பூர்த்தி செய்­தபின் முஸ்லிம் உயர் பாட­சா­லையில் கற்­ப­தற்­கான புலமைப் பரி­சிலைப் பெற்றார்.

 

அப்­ பா­ட­சாலைக் கல்­வியை பூர்த்தி செய்­த­வுடன் அல்­ஹாஜி மூஸா அன்ட் சன்ஸ் எனும் நிறு­வ­னத்தில் சாதாரண ஊழி­ய­ராக பணி­யாற்ற ஆரம்­பித்தார்.

 

படிப்­ப­டி­யாக முன்­னே­றிய அவர் அந்­ நி­று­வ­னத்தின் விற்­பனை முகா­மை­யா­ள­ராக பதவி உயர்வு பெற்றார்.

 

2000 ஆம் ஆண்டின் முற்­ப­கு­தியில், வீட்டு மனை வர்த்­தகம் தொடர்­பான பட்­டப்­ப­டிப்­புக்­காக அவர் லண்­ட­னுக்குச் சென்றார்.

 

லண்­டனில் கல்­விக்­கான செலவை சமா­ளிப்­ப­த­ற்காக அர்கோஸ் எனும் நிறு­வ­னத்தில் பாது­காப்பு ஊழி­ய­ராக அவர் பணி­யாற்­றினார்.

 

பின்னர் வீட்டு மனை வர்த்­த­கத்தில் அவர் ஈடு­பட ஆரம்­பித்தார். 2006 ஆம் ஆண்டில் தனது சொந்த நிறு­வ­னத்தை அவர் தொடங்­கினார்.

 

இவ்­ வ­ருட ஜனா­தி­பதித் தேர்­தலில் காம்­பி­யாவின் 7 எதிர்க்­கட்­சிகள் இணைந்து தமது பொது வேட்­பா­ள­ராக அடாமா பரோவை நிறுத்­தின.

 

இத்­ தேர்­தலில் யெஹ்யே ஜெம்­மே­வுக்கு எதி­ராக அடாமா பரோவ் ஈட்­டிய வெற்­றி­யா­னது, இவ்வருட அமெரிக்க ஜனாதி பதித் தேர்தலில் வர்த்தகரான டொனா ல்ட் ட்ரம்ப் ஈட்டிய வெற்றியைப்போன்று அதிர்ச்சிகரமானது என காம்பிய மற்றும் மேற்குலக ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

 

எதிர்வரும் ஜனவரி மாதம் காம்பியாவின் ஜனாதிபதியாக அடாமா பரோவ் பதவியேற்கவுள்ளார்.

 

தற்போதைய ஜனாதிபதி யெஹ்யே ஜெம்மே (வலது)

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.