Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சவால்களை வென்று சாதித்த ஜெயலலிதா
2016-12-07 16:15:14

புரட்சித் தலைவி, அம்மா, ஜெயலலிதா என்றெல்லாம் என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜெயாவின் இயற்பெயர் கோமளவள்ளி.

 

இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவளியை சேர்ந்தது.

 

 

ஜெயலலிதா தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன்பிறகு  அவரின்  தாய் மற்றும் தாய்வழி தாத்தா, பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார்.

 

பெங்களூரில் தங்கியிருந்த அந்தக் குறுகிய காலத்தில் அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால் அவர் சென்னை சென்றார்.  

 

சட்டம் படிக்க ஆசைப்பட்டும்
சினிமாவில் நடிக்கும் நிர்ப்பந்தம்


சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த ஜெயலலிதா,  பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார்.

 

தனது குழந்தைப் பருவத்திலிருந்தே  கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா, சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் விதி அவருக் கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது.

 

குடும்ப நிதிப் பிரச்சினை காரணமாக அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில் அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார்.

 

1980 ஆம் ஆண்டில் அ.இ.அ.தி.மு.க நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் ஜெயலலிதாவை பிரசார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்  அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.

 

இதுவே அவரை திறம்பட இந்திய நாடாளுமன்றத்தில் செயற்பட வழிவகுத்தது. பின்னர் அவர் தீவிரமாக அ.இ.அ.தி.மு.க அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார்.

 

அவர் அரசியலில்  எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே  ஜெயலலிதாவை அ.இ.அ.தி.மு.க கட்சியின் எதிர்கால வாரிசாக ஊடகங்களை மதிப்பிடச் செய்தது.  

 

முதல்வர் ஜெயலலிதா எப்போதும் தனது சுயசரிதையை எழுதிய தில்லை.

 

மாறாக தனது சொந்த வாழ்க்கைக் கதைகளை புனைகதைகளாக எழுதினார். அவர் ஏதோ நாவல் எழுதுகிறார் என்று தான் முதலில் நினைத்தி ருப்பார்கள்.

 

அவை அவரின் கதைகள் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட பலரது கதைகளும் அந்த தொடர்கதைகளில் வருவதைக் காணும் போது தான் அது தடைசெய்யப்பட்டது.

 

ஒரு முறை 'குமுதத்திலும்' இன்னொருமுறை 'தாய்' வார இதழிலும் அவரது படைப்புகள் பாதியிலேயே நின்றன. 1991சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அபார வெற்றி பெற்றதையடுத்து 24.06.1991 அன்று தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறை பதவி ஏற்றார்.

 

அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டதாக தி.மு.க. செய்த தீவிரப் பிரசாரத்தின் விளைவாக 2006 சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

 

1991–1996 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 66.65 கோடி ரூபா அளவுக்கு சொத்து சேர்த்ததாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.

 

இதே குற்றச்சாட்டின் கீழ், 1996 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை பொலிஸார் ஜெயலலிதாவை கைது செய்தனர். 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேலும் சிலர் மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தி.மு.க. அரசின் சார்பில் மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 

 

1999ஆம் ஆண்டு ஊழல் வழக்குகளில் ஒன்றான நிலக்கரி இறக்குமதி வழக்கிலிருந்து  நீதிமன்றம் விடுவித்தது. பிளசண்ட் ஸ்டே என்ற ஹோட்டல் கட்டுவதற்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் 2.2.2000 அன்று குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அரசுக்கு சொந்தமான ’டான்சி’ நிலத்தை வாங்கிய வழக்கில் 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

மேற்படி வழக்கு களில் குற்றவாளி என்ற தீர்ப்பு வெளியான நிலை யிலும் 2011சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெயலலிதா இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.

 

டான்சி வழக்கில் தண்டிக் கப்பட்ட ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டதும்  முதலமைச்சராக பதவி ஏற்றதும் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித் ததையடுத்து  21.9.2011 அன்று அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

 

பிளசன்ட் ஸ்டே மற்றும் டான்சி வழக்குகளில் இருந்து ஜெயல லிதாவை விடுவித்து சென்னை மேல்நீதிமன்றம் 4.12.2011 அன்று தீர்ப்பளித்தது. இதை யடுத்து  21.2.2002 அன்று ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்று  2.3.2002 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

 

தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மீது நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்றி 18.11.2003 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

24.11.2003 அன்று டான்சி வழக்கில் ஜெயலலிதாவை சென்னை மேல் நீதிமன்றம் விடுவித்தது செல்லும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது. ஸ்பிக் பங்குகள் தொடர்பான வழக்கிலிருந்து 23.1.2004 அன்று ஜெயா விடுவிக்கப்பட்டார்.

 

2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. 2011 சட்ட சபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி  பெற்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.

 

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் 2011 ஒக்டோபர்  நவம்பர் மாதங்க ளில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான 1,339 கேள்விகளுக்கு பதிலளித்தார். இவ் வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் குற்றவாளி என பெங்களுர்  சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா 27.9.2014 அன்று தீர்ப்பளித்தார்.

 

ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. ஜெயலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதமும் மற்ற மூவருக்கும் 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

 

இதையடுத்து பார்ப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா  முதலமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். 21 நாள் சிறை வாசத்துக்கு பின்னர் 18-10-2014 அன்று உயர்நீதி மன்றம் அவரை பிணையில் விடுவித்தது.

 

11.5.2015 அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னர் விதித்த நான்காண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் இவ் வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா 23.5.2015 அன்று ஐந்தாவது முறை முதலமைச்சராக பதவி ஏற்றார். 2016 சட்ட சபை தேர்தலிலும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து இருமுறை பதவி ஏற்ற கட்சி என்ற பெருமையை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஏற்படுத்திய ஜெயலலிதா ஆறாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

 

22.9.2016 அன்றிரவு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா சென்னை அப்பலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

 

இதனையடுத்து தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் டிசெம்பர் 5 ஆம் திகதி இரவு அவர் காலமானார். 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.