Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
எகிப்தை சேர்ந்த உலகின் மிக பரு­ம­னான பெண் சத்­தி­ர­சி­கிச்­சைக்­காக மும்­பைக்கு செல்­கிறார்
2016-12-12 14:42:05

எகிப்தைச் சேர்ந்த உலகின் மிகப் பரு­ம­னான பெண்­ணுக்கு இந்­தி­யாவின் மும்பை நகரில் உடல் எடை குறைப்­புக்­கான சத்­தி­ர ­சி­கிச்­சைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

 

இமான் அஹ்மத் அப்த் எல் எத்தி 


 

இமான் அஹ்மத் அப்த் எல் எத்தி எனும் இப் பெண் 36 வய­தா­னவர். இவரின் எடை சுமார் 500 கிலோ­கிராம் (1,100 இறாத்­தல்கள்) ஆகும். தற்­போது உலகில் மிக அதிக எடை கொண்ட பெண் இவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

இது­வரை உலகில் உயிர்­வாழ்ந்­த­வர்­களில் மிக அதிக எடை­யுள்ள பெண்­ணாக அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் மாநி­லத்தில் கரோல் யாஜெர் உள்ளார். 1,189 இறாத்தல் எடை­கொண்­டி­ருந்த கரோல் யாஜெர்  1993 ஆம் ஆண்டு இறந்தார்.

 

 

இவரின் எடையை இமான் அஹ்மத் அப்த் எல் எத்தி  நெருங்கிக் கொண்­டி­ருந்த நிலை­யில், அவ­ருக்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

 

இதற்­காக இந்­தி­யா­வுக்கு இமான் அஹ்மத் அப்த் எல் எத்­தியை அழைத்துச் செல்­வ­தற்கு அவரின் குடும்­பத்­தினர் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

 

 

அதிக பருமன் கார­ண­மாக எழுந்து நடப்­ப­தற்கு முடி­யா­ம­லுள்ள இமான் அஹ்மத் அப்த் எல் எத்­தி, கடந்த 2 தசாப்­தங்­க­ளாக வீட்­டி­லி­ருந்து வெளியே சென்­ற­தில்­லையாம். 

 

எனி­னும், 4,345 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள மும்பை நக­ருக்கு அவர் அழை த்துச் செல்­லப்­ப­ட­வுள்ளார்.

 

மும்­பையைச் சேர்ந்த டாக்டர் முஃபாஸல் லக்­த­வா­லா, அள­வுக்கு அதி­க­மான பருமன்  கொண்­ட­வர்­களின் எடையை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் குறை­வ­டையச் செய்­வதில் பெயர் பெற்­றவர்.

 

இமான் அஹ்மத் அப்த் எல் எத்­திக்கு அவர் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ள­வுள்ளார்.

 

மும்­பை­யி­லுள்ள Centre for Obesity and Diabetes Surgery எனும் மருத்­து­வ­ம­னையின் ஸ்தாப­க­ரான டாக்டர் முஃபாஸல் லக்­த­வாலா இது தொடர்­பாக கூறு­கை­யில், தான் ஏற்­கெ­னவே 300 கிலோ­கி­ரா­முக்கு (660 இறாத்­தல்கள்) அதிக எடை கொண்­ட­வர்­க­ளுக்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்­துள்­ள­தா­கவும் எனி­னும், அப்த் எல் எத்­தியின் நிலை மிக ஆபத்­தா­னது எனவும் தெரி­வித்­துள்ளார்.

 

அப்த் எல் எத்தி விட­யத்தில் இதற்கு மேல் தம்மால் செய்­யக்­கூ­டிய விடயம் எது­வு­மில்லை என   எகிப்­தி­லுள்ள மருத்­து­வர்கள் தெரி­வித்­த­தை­ய­டுத்­து, டாக்டர் முஃபாஸல் லக்­த­வா­லாவை அப்த் எல் எத்­தியின் சகோ­தரி தொடர்புகொண்டார்.

 

அப்த் எல் எத்­தியின் புகைப்­ப­டத்தை தான் முதலில் பார்த்­தவுடன் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­த­தா­க­வும்,  இவர் எப்­படி உயி­ருடன் இருக்­கிறார் என வியப்­ப­டைந்­த­தா­கவும் முஃபாஸல் லக்­த­வாலா தெரி­வித்­துள்ளார்.

 

சக மருத்துவர்களுடன் டாக்டர்


 

எனி­னும், அப்த் எல் எத்திக்கு உதவுவதற்கு தான் தீர்மானித்தாக அவர் கூறி யுள்ளார். 'இறைவன் எனக்கு அளித்த திறமைகளை இப் பெண்ணை காப்பாற் றுவதற்கு பயன்படுத்த முடியுமானால் நான் அதற்கு முயற்சிக்க வேண்டும்' என்கிறார் டாக்டர்  முஃபாஸல் லக்தவாலா.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.