Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஜெய­ல­லிதா மகளா இவர்? உண்மை என்ன?
2016-12-14 15:03:15

மறைந்த தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவின் உண்­மை­யான மகள் என்ற தக­வ­லுடன் ஒரு புகைப்­படம் சமூக வலைத்­த­ளங்கள் மற்றும் இணை­யத்
­த­ளங்­களில் வேகமாக பரவி வரு­கி­றது.

 

இப்­ பு­கைப்­ப­டத்தில் இருக்கும் இளம் பெண், ஜெய­ல­லி­தாவின் முகச்­சா­ய­லுடன் காணப்­ப­டு­கிறார். இவர் ஜெய­ல­லி­தாவின் உண்­மை­யான மகள் என சிலர் குறிப்­பிட்­டுள்­ளனர்.

 

ஆனால், இவர் ஜெய­ல­லி­தா வின் மகள் அல்லர் எனவும், இவர் கேர­ளாவை சேர்ந்­தவர்' எனவும் பிர­பல பாடகி சின்­மயி. பேஸ்புக்கில் தெரி­வித்­துள்ளார்.

 

இது தொடர்­பாக தமி­ழ­கத்தின் விக­ட­னுக்கு அளித்­துள்ள செவ்­வியில் சின்­மயி தெரி­வித்­துள்­ள­தா­வது: ''இந்த உல­கத்­துல ஒரே மாதிரி 7 பேர் இருப்­பார்கள் என்று  கேள்­விப்­பட்­டி­ருக்கோம் இல்­லையா? அப்­ப­டித்தான் இவர்­களும்.

 

இந்தப் படத்­துல உள்­ள­வர்­க­ளுக்கும் தமிழ்­நாட்டு அர­சி­ய­லுக்கும் சம்­பந்­தமே கிடை­யாது. அவர்கள் தமிழ்­நாட்­டி­லேயே இல்லை. பல வரு­ஷங்­களா வெளி­நாட்­டில வாழற இசைக்­கு­டும்­பத்தைச் சேர்ந்­த­வங்க.

 

படத்­துல அந்தப் பெண்­ கூட இருக்­கி­றவர் அவங்­க­ளோட கணவர் ராம­நாதன். எங்­கம்மா வயித்­துல பிறக்­காத பிள்ளை மாதிரி. எனக்கு அண்ணா மாதிரி. அதிர்ந்து பேச மாட்டார். பிர­பல மிரு­தங்க வித்வான் திரு­வ­னந்­த­புரம் பாலாஜி, இவரின் சகோ­தரர்.

 

அமை­தி­யான, அடக்­க­மான குடும்பம் அவங்­க­ளு­டை­யது. எங்­க­ளுக்கு ரொம்ப வரு­ஷங்­களா நெருக்­க­மா­ன­வங்க. யாரோ பண்­ணின குசும்பு வேலை இது. அசப்­புல அவங்­களை மாதிரி இருக்­காங்­கன்னு இப்­ப­டி­யொரு புர­ளியைக் கிளப்பி விட்­ருக்­காங்க.

 

அந்தப் பெண்­ணோட பெய­ரையோ, அவங்க இருக்­கிற இடத்­தை­யோ­கூட நான் சொல்ல விரும்­பலை. அப்­படிச் சொன்னா அவங்­க­ளோட நிம்­மதி கெட்டுப் போயிடும். குழந்­தைங்­க­ளோட சந்­தோ­ஷமா, அமை­தியா வாழ்ந்­திட்­டி­ருக்­காங்க. அப்­ப­டியே இருக்­கட்டும்.

 

எங்­கயோ, ஏதோ ஒரு கல்­யா­ணத்­துல எடுத்த படம் இப்­படித் தப்பா பரவி இவ்­வ­ளவு தூரம் வந்­தி­ருக்கு. முதல் முறை இந்தப் படம் சோஷியல் நெட்­வொர்க்ல பர­வி­னதைக் கேள்­விப்­பட்டே அவங்க குடும்பம் அதிர்ச்­சி­யா­யிட்­டாங்க.

 

கணவர் ராமநாதனுடன் திவ்யா ராமநாதன்


 

இப்ப மறு­படி யாரோ அதைக் கிள­றி­விட்­டி­ருக்­காங்க. மிக வெறுத்துப் போய், இந்தச் செய்­திக்கு ஒரு முற்­றுப்­புள்ளி வச்­சா­க­ணும்­னு தான் அவங்க சம்­ம­தத்­தோட இந்தப் படத்தை ஷேர் பண்­ணினேன்.

 

சேவை மனப்­பான்­மை­யி­லா­கட்டும், சங்­கீ­தத்­து­ல­யா­கட்டும்... பெரிய பாரம்­ப­ரியம் உள்ள குடும்பம். ஆனா கொஞ்­சம்­கூட ஆர­வாரம் இல்­லாத குடும்பம். அவங்­களைப் போய் இப்­படி வம்­புக்­கி­ழுக்­கி­றது என்ன அட்­டூ­ழி­யம்னு தெரி­யலை.

 

அவங்க கண­வ­ருக்கு நல்ல மனை­வியா, குழந்­தை­க­ளுக்கு அன்­பான அம்­மாவா அமை­தியா எங்­கேயோ ஒரு மூலை­யில வாழ்ந்­திட்­டி­ருக்­காங்க. அவங்­களை நிம்­ம­தியா வாழ விடு­வோமே... ப்ளீஸ்..'' எனக் கூறி­யுள்ளார்.

 

இப்­ பு­கை­ப்­படம் 2014 ஆம் ஆண்டு முதல்­த­ட­வை­யாக இணை­யத்தில் வலம்­வரத் தொடங்­கி­யதாம். அப்­போது ஜெய­ல­லிதா சிறையில் இருந்தார். இது தொடர்­பாக மிரு­தங்க வித்வான் திரு­வ­னந்­த­புரம் பாலாஜி, அளித்­துள்ள செவ்­வி­யொன்றில், ''இப் ­ப­டத்தில் இருப்­பவர் எனது சகோ­தரர் ராம­நா­தனின் மனைவி திவ்யா ராம­நாதன்.

 

ஜெயலலிதா


 

கடந்த வருடம் இப்­ பு­கைப்­ப­டத்தை நாம் முதல் தட­வை­யாக இணை­யத்தில் கண்டோம். பேஸ்புக் நிறு­வ­னத்­துடன் தொடர்புகொண்டு இப் படத்தை நீக்குமாறு கோரினோம். 

 

ஆனால், இதில் மோசமாக எதுவுமில்லை எனவும் இவ் வதந்தி காலப்போக்கில் தணிந்துவிடும் எனவும் எமக்கு கூறப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.

 

ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் இப் புகைப்படம் அதிகமாக பரவுகிறது. இது குறித்து எனது சகோதரரும் திவ்யாவும் கவலை யடைந்துள்ளனர்'' எனக் கூறியுள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.