Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நடிகை பூஜாவுக்குத் திருமணம்
2016-12-21 11:00:14

இந்திய, இலங்கை திரையுலகின் பிரபல நடிகை பூஜா உமா சங்கர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான பிரசாந்தை நடிகை பூஜா திருமணம் செய்துள்ளார்.

 

 

கொழும்பு ஹெவ்லொக் சிற்றியில் கடந்த சனிக் கிழமை இத் திருமண வைபவம் நடைபெற்றது. பூஜாவும் பிரசாந்த்தும் ஒரு வருடத்துக்கு முன்னர் முதல் தடவையாக சந்தித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

பூஜாவின் தாயார் சந்தியா, இலங்கையர் பூஜாவின் தந்தை எச்.ஆர்.உமாசங்கர், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

1981 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்தவர் பூஜா. ஆரம்பக் கல்வியை இலங்கையிலேயே கற்றவர். பின்னர் கர்நாடக மாநிலத்தின் சிங்மங்களூரிலும், மைசுரிலும் கல்வி கற்கச் சென்றார்.

 

பெங்களுாரில் பி.கொம் பட்டம் பெற்ற பூஜா, பின்னர் எம்.பி.ஏ. பட்டதாரியானார். 2003 ஆம் ஆண்டு முதல் தமிழ், சிங்களம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களில் பூஜா நடித்து வருகிறார்.

 

இயக்குநர் சரணின் இயக்கத்தில் மாதவன் நடித்து 2003 ஆம் ஆண்டு   வெளிவந்த 'ஜேஜே' தமிழ் திரைப்படமே பூஜாவின் நடிப்பில் வெளி வந்த முதல் தமிழ் திரைப்படமாகும்.

 

தனது முதல் படத்திலேயே தன் வசீகரத்தினாலும், நடனத்தாலும் நடிப்பாலும் பலரையும் கவர்ந்தார் பூஜா. அப் படத்தில் நடித்தமைக்காக சிறந்த புதுமுக நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது.

 

சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்ட பூஜா 2006 ஆம் ஆண்டு வெளியான 'அஞ்சலிக்கா' திரைப் படம் மூலம் சிங்களத் திரையுலகுக்கும் அறிமுகமானார்.

 

 

அப் படத்திலும் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அப் படத் திற்காக சிறந்த நடிகை, சிறந்த பிரபல நடிகை ஆகிய விருதுகளுக்கு பூஜா பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

 

 

35 வயதான பூஜா சிங்களத் திரையுலகிலும் முன்னிலை நடிகையாக விளங்குகிறார். அவர் கதாநாயகியாக நடித்த 'சரிகம' எனும் சிங்கள திரைப்படம் அண்மையில் வெளியாகியது. இப் படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.