Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தமக்கு எதி­ராகப் போரா­டிய டென்மார்க் யுவ­தியை கொல்­ப­வ­ருக்கு 10 லட்சம் டொலர் சன்­மானம் வழங்­கு­வ­தாக ஐ.எஸ். அறி­விப்பு
2016-12-22 14:34:39

ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கத்­துக்கு எதி­ராகப் போரா­டி­வரும் 23 வயதான் ஜோன்னா  பலானி எனும் யுவ­தியை கொல்­ப­வ­ருக்கு ஒரு மில்­லியன் டொலர் அன்­ப­ளிப்பு அளிப்­ப­தாக ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்கம் அறி­வித்­துள்­ளது.

 

குர்திஷ் கிளர்ச்­சி­யா­ளர்­ க­ளுடன் இணைந்து, ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கத்­துக்கு எதி­ராக போரா­டிய ஜோன்னா பலானி தற்­போது டென்­மார்க்கில் சிறை யில் அடைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

ஈரானை பூர்­வீ­க­மாகக் கொண்­டவர் ஜோன்னா பலானி, இவ­ரது குடும் பம் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு டென்மார்க் நாட்டில் குடி­யே­றி­யது. பின், டென்மார்க் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்றுவந்த ஜோன்னா பலானி, தனது கல்­வியை இடை­நி­றுத்­தி­விட்டு குர்திஸ் இயக்­கத்­தோடு இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்­கத்­துக்கு எதி­ராக துப்­பாக்கி ஏந்தி போரா­டினார்.

 

சிரி­யா­வுக்கு சென்று போராட்­டத்தைத் தொடர்­வ­தற்கு ஜோன்னா முயற்­சித்­த­போது, சிரிய எல்லைப் பகு­தி­களில் அந்த நாட்டு இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

 

அதை­ய­டுத்து டென்மார்க் அரசு, ஜோன்னா பலா­னியின் கட­வுச்­சீட்டு மற்றும் அடை­யாள அட்­டையை பறி­முதல் செய்து தமது நாட்­டுக்கு அழைத்துச் சென்­றது. சட்டவிரோ­த­மாக நாட்­டை­விட்டுத் தப்பிச் சென்­ற­தாலும், போராட்டக் குழு­வோடு இணைந்து செயற்­பட்ட குற்­றத்­துக்­கா­கவும் டென்மார்க்  நீதி­மன்­றத்தில் ஜோன்னா பலா­னிக்கு எதி­ராக வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டது.

 

ஜோன்னா மீண்டும் யுத்­தத்தில் பங்­கு­பற்­று­வதைத் தடுப்­ப­தற்­காக கடந்த செப்­டெம்பர் மாதம் அவ­ருக்கு 12 மாத கால பய­ணத்­தடை விதிக்­கப்­பட்­டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் தான் கத்­தா­ருக்கு பயணம் செய்­ததை கடந்த வாரம் ஜோன்னா பலானி ஒப்­பு­க­கொண்டார்.

 

அதை­ய­டுத்து பய­ணத் ­த­டையை மீறி­ய­மைக்­காக அவர் மீண்டும் கைது செய்­யப்­பட்டார். அவ­ருக்கு 2 வரு­ட­ம் வ­ரை­யான சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

அதே­வேளை, ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுடன் இணைந்து போரா­டிய பின்னர் தாயகம் திரும்­பு­வர்­க­ளுக்கு டென் மார்க் அரசு தொழில் வாய்ப்­பையும் வழங்கும் நிலை யில், டென் மார்க் அரச படைகள் போராடும் தரப்­புடன் இணைந்து போரிட்­ட­மை க்­காக ஜோன்­னாவை தண்­டிப்­பது அபத்­த­மா­னது என அவரின் சட்­டத்­த­ரணி கூறி­யுள்ளார்.

 

இந்­நி­லையில், தமக்கு எதி­ராக ஆயுதப் போராட்டம் நடத்­திய ஜோன்னா பலா­னியை கொல்­ப­வ­ருக்கு 10 லட்சம் அமெ­ரிக்க டொலர் வழங்­கப்­படும் என ஐ.எஸ். இயக்கம் அறி­வித்­துள்­ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.