Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
எம்.ஜி.ஆர். இறந்தவுடன் பசுமாடுகளின் கண்களில் எம்.ஜி.ஆரை தேடிய மக்கள்
2016-12-24 10:26:04

தமி­ழக முத­ல­மைச்சர் ஜெ.ஜெய­ல­லி­தாவின் மரணம் குறித்து பல்­வேறு சர்ச்­சைகள் நில­வு­கின்­றன. பல ஊகங்­கள், வதந்­தி­களும் உலா­வு­கின்­றன.   டிசெம்பர் 5 ஆம் திகதி இரவு ஜெய­ல­லிதா கால­மானார் என சென்னை அப்­பலோ மருத்­து­வ­ம­னை­யினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், ஜெய­ல­லிதா அதற்கு முன்­னரே இறந்­து­விட்டார் என பலர் கரு­து­கின்­றனர்.  ஜெய­ல­லிதா கால­மான பின் அவரின் உருவம் மேகத்தில் தென்­பட்­டது என சிலர் கூறு­கின்­றனர்.


ஜெய­ல­லி­தாவை அர­சி­ய­லுக்கு கொண்­டு­வந்த நடி­கரும் முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான எம்.ஜி.ஆர். 1987 டிசெம்பர் 24 ஆம் திகதி கால­மானார். நாளை எம்.ஜி.ஆரின் 29 ஆவது நினைவு தினம். எம்.ஜி.ஆர். இறந்த வேளை­யி­லும், இது போன்ற விநோ­தங்கள் இடம்­பெற்­றன என சுட்­டிக்­காட்­டு­கிறார் தமி­ழ­கத்தின் பிர­பல எழுத்­தாளர் விநா­யக முருகன்.  ஜெய­ல­லி­தாவின் மர­ணத்தின் பின்னர் விநா­ய­க­மு­ருகன் எழு­திய கட்­டுரை இது.

 


ஒருவர் இறந்­ததும் உடனே அவரை விமர்­சனம் செய்­ய­லாமா என்று சில நண்­பர்கள் வருத்­தப்­பட்­டார்கள். அத­னால், இந்தப் பதிவை எழுத வேண்­டி­யுள்­ளது.
இன்று என்­ன­வெல்லாம் நடக்­கி­ற­தோ, அதை­விடப் பன்­ம­டங்குக் கூத்­துகள் எம்.­ஜி.ஆர். இறந்­த­போது நடந்தன.

 

உண்­மை­யில், எம்­ஜிஆர் அமெ­ரிக்­கா­வி­லேயே இறந்­து­விட்டார் என்­றும், அவரை அங்­கேயே அடக்கம் செய்­து­விட்­டார்கள் என்­றும், பிறகு அவரைப் போலவே இருக்கும் ஒரு சினிமா டூப்பை அழைத்­து­வந்து சில நாட்கள் வைத்­தி­ருந்­து, பிறகு சொத்தில் கையெ­ழுத்து வாங்­கிக்­கொண்டு அவரைக் கொன்­று­விட்­டார்கள் என்றும் ஒரு புரளி கிளப்­பி­வி­டப்­பட்­டது.


பிற­கு, எம்.­ஜி­.ஆரை மோரில் விஷம் வைத்துக் கொன்­றார்கள் என்று சொன்­னார்கள். அந்த மோரை யார் கொடுத்­தார்கள் என்­பதில் இரண்டு கருத்­துகள். பிற­கு, அவர் சாப்­பிட்ட தங்க பஸ்­பம்தான் அவ­ரது கிட்­னியைச் செய­லி­ழக்க வைத்துக் கொன்­றது. அதற்குக் கார­ணம், கேரள மாந்­தி­ரீகர் என்று சொன்­னார்கள்.

 


மேகத்தில் எம்.­ஜி­.ஆரின் உருவம் தெரி­கி­றது என்று சொன்­னார்கள். எங்க ஊர் பக்­கத்தில் ஒரு பசு மாட்டின் கண்ணில் எம்.­ஜி­.ஆரின் உருவம் தெரி­கி­றது என்று சொன்­னார்கள். நான் சுவா­மி­மலை பக்­கத்தில் இருக்கும் ஆதனூர் சென்று பார்த்தேன். அங்கு ஓர் ஏழை விவ­சாயி வீட்டின் முன்­பு, ஒரு மாட்­டுக்கு முன்னால் ஊரே திரண்டு கற்­பூர ஆரத்தி காட்­டிக்­கொண்­டி­ருந்­தார்கள். அந்த மாட்டின் கண்ணில் சிறு வெள்ளைப் புள்ளி (இது கால்­ந­டை­க­ளுக்குப் பொது­வாக வரும் ஒரு­வித விழிப்­ப­டல நோய்) இருந்­தது.


அதைத்தான் எம்.­ஜி.ஆர் என்று ஆரத்தி காட்­டி­னார்கள். அந்த உண்­மையை அங்கு சொல்­லி­யி­ருந்தால் அடித்துக் கொன்­றி­ருப்­பார்கள். பிறகு, அந்தத் தகவல் மெல்லப் பர­வி, இன்­னொரு ஊரில் வேறொரு பசு மாட்டுக் கண்ணில் எம்.­ஜி.ஆர். தெரி­கிறார் என்று சொன்­னார்கள். அந்தக் கிரா­மத்தில் விசா­ரித்­தால், அது எங்கள் ஊர் இல்லை… பக்­கத்து ஊரில் என்­றார்கள். அங்கு விசா­ரித்­தால், 'நான் பார்க்­கலை.. பார்த்­த­வர்கள் என்­னிடம் சொன்­னார்கள்' என்று நழு­வி­னார்கள். தமி­ழ­கமே தங்கள் வீட்டுப் பசு மாட்டின் கண்ணில் எம்­.ஜி.ஆர் தெரிந்­து­விட மாட்­டாரா என்று தவித்­தது. அப்­படித் தெரி­யாத மாடு­களை ‘சனி­யனே! நீயெல்லாம் ஒரு மாடா’ என்று போட்டு அடித்­தார்கள்.


சென்­னைக்குச் செல்லும் அவ­ரது ரசி­கர்­கள், எம்­.ஜி.ஆர் சமா­தியில் காதை வைத்து அவ­ரது ரோலக்ஸ் வாட்­சி­லி­ருந்து ‘டிக்.. டிக்’ சத்தம் கேட்­குது என்­றார்கள். சிலர் அது எம்.­ஜி.­ஆரின் இதயம் துடிக்கும் சத்தம் என்றும் சொன்­னார்கள். ஒரு­வர், ‘எம்.­ஜி.ஆர். தூங்­கும்­போ­து, அவரை அப்­ப­டியே உயி­ரோடு புதைத்­து­விட்­டார்கள்’ என்று ஆவே­சப்­பட்­டு, சமா­தியை உடைக்கக் கடப்­பா­ரை­யுடன் கிளம்­பி­யே­விட்டார். பிற­கு, அவரைச் சிலர் சமா­தானம் செய்­து, அது ஜேர்­ம­னியில் செய்த கடிகாரம்.அந்த பெட்­டறி ஆயிரம் ஆண்­டுகள் வேலை செய்யும் என்ற விஞ்­ஞான (?!) உண்­மையைச் சொன்­னார்கள்.


எம்­.ஜி.­ஆரின் ஆவி, ஆங்­காங்கு கிரா­மத்தில் உல­வு­வ­தாகச் சொன்­னார்கள். வயக்­காட்­டுக்குச் செல்­ப­வர்­களைப் பார்த்­து, ‘என்ன முனியா... செளக்­கி­யமா... ஏதா­வது உதவி வேணுமா?’ என்று விசா­ரித்­த­தாகச் சொன்­னார்கள். இதை எல்லாம் சிலர் நம்­ப­வில்லை என்­றா­லும், வெறி­பி­டித்த ரசி­கர்கள் அவர்­களை அடித்துக் கொன்­று­வி­டு­வார்கள் என்று அமை­தி­யாக இருந்­தார்கள். அப்­போது மக்கள் இருந்த மன­நி­லை­யில், எம்.­ஜி.­ஆரை எம்.என்.நம்­பி­யார்தான் கொன்றார் என்று சொல்­லி­யி­ருந்­தா­லும், நம்­பியார் வீட்டு முன்பு சென்று கல­வரம் செய்­தி­ருப்­பார்கள்.


இதை ஏன் எழு­து­கிறேன் என்­றால், ஊரே இது­போன்ற கொந்­த­ளிப்பில் கிடக்க… சிலர் மட்டும் அவர்கள் வேலை­களில் மும்­மு­ர­மாக இருந்­தார்கள். இர­க­சி­ய­மாக சொத்­து­களைப் பிரித்­துக்­கொண்­டி­ருந்­தார்கள். அது­வரை யாரென்றே தெரி­யாத சிலர் புதுப் பணக்­கா­ரர்களானார்கள். சாராயம் விற்­ற­வர்கள் எல்லாம் கல்வி நிறு­வ­னங்­களை ஆரம்­பித்­தார்கள். மருத்­து­வ­ம­னை­களை ஆரம்­பித்­தார்கள். மடங்­களைத் தொடங்­கி­னார்கள். சைக்­கிளில் போன­வர்கள் எல்­லாரும் காரில் போனார்கள். யார் யாரோ கட்சி ஆரம்­பித்­தார்கள். அவர்கள் எல்­லாரும் யாரென்றே எங்­க­ளுக்குத் தெரி­யாது. செல்­போன், இன்­டர்நெட் எல்லாம் இருக்கும் காலம் இது.


வாட்ஸ்அப் செய்தியில் ஆவி என்று வந்த ஒரு போட்டோஷாப் உருவத்தைப் பார்த்தேன். மக்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எவ்வளவு அறிவியல் வளர்ந்தாலும் பசு மாட்டின் கண்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர் களைப் புனிதர்களாக்கத் துடித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

 

இன்னொரு பக்கம், சுருட்டுற கூட்டம் தங்கள் காரியத்தில் உஷாராக இருப்பார்கள். ஒருவர் இறந்ததும் அவ ரைக் கடுமையாக விமர்சிப்பது எவ் வளவு அநாகரிகமோ, அதைவிட ஆபத்தானது புனிதராக்குவது!

 

- விநாயக முருகன்

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.