Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
33,000 அடி (10,000 மீற்றர்) உய­ரத்தில் பறந்த விமா­னத்­தி­லிருந்து வீழ்ந்து உயிர்­தப்பி 44 வரு­டங்கள் வாழ்ந்த பெண் மரணம்
2016-12-26 11:58:11

33,000 அடி (10,000 மீற்றர்) உய­ரத்தில் பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்­தி­லி­ருந்து உயிர் தப்பி, 44 வரு­டங்கள் உயிர்­வாழ்ந்த பெண்­ணொ­ருவர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உயி­ரி­ழந்­துள்ளார். 

 

சேர்­பி­யாவைச் சேர்ந்த வெஸ்னா வுலோவிக் என்­ப­வரே இப்­ பெண்­ணாவார். மேற்­படி அனர்த்­தத்தில் ஆச்­ச­ரி­ய­க­ர­மாக உயிர்­ தப்­பிய அவர் தனது 66 வயதில் இறந்­துள்ளார்.

 

1972 ஜன­வரி 26 ஆம் திகதி மேற்­படி விமான அனர்த்தம் இடம்­பெற்­றது. அப்­போது 23 வயது யுவ­தி­யாக இருந்த வெஸ்னா வுலோவிக், யூ கோஸ்­லா­வி­யாவின் (சேர்­பியா, பொஸ்­னியா, குரோ­ஷியா உட்­பட பல குடி­ய­ர­சுகள் ஒன்­றி­ணைந்த நாடு) விமான சேவை நிறு­வ­ன­மான யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் விமானப் பணிப்­பெண்­ணாக பணியாற்­றி ­வந்தார். 

 

1972 ஜன­வரி 26 ஆம் திகதி யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் டக்ளஸ் டி.சி 9 விமா­ன­மொன்றில் வெஸ்னா  வுலோவிக் பணியில் இருந்தார். 

 

அவ் ­வி­மானம் சுவீ­டனின் ஸ்டொக்ஹோம் நக­ரி­லி­ருந்து புறப்­பட்டு டென்­மார்க்கின் கொப்­பன்­ஹேகன் நகரில் தரை­யி­றங்­கிய பின் யூகோஸ்­லா­வி­யாவின் தலை­நகர் பெல்­கி­ரேட்டை நோக்கிப் புறப்­பட்­டது.

 

 

அதன்பின் செக்­கஸ்­லோ­வாக்­கி­யாவின் (தற்­போ­தைய செக் குடி­ய­ரசின்) மலைப்­பி­ராந்­தியம் ஒன்­றுக்கு மேலாக பறந்­து­ கொண்­டி­ருந்­த­போது அவ் ­வி­மானம் வெடித்துச் சித­றி­யது.

 

யூகோஸ்­லா­வி­யாவைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழு­வொன்­றினால் விமா­னத்தில் வைக்­கப்­பட்ட வெடி­குண்டு வெடித்­த­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

 

அப்­போது 33,000 அடி உய­ரத்தில் பறந்­து­ கொண்­டி­ருந்த மேற்­படி விமா­னத்தில் அவ்­வே­ளையில் மொத்­த­மாக 28 பேர் இருந்­தனர்.

 

அவர்­களில் 27 பேர் பலி­யா­கினர். ஆனால், வெஸ்னா வுலோவிக் மாத்­திரம் உயிர்­தப்­பினார். 

 

 

விமானப் பணிப்­பெண்­ணான வெஸ்னா, விமானம் கீழே விழத்­
தொ­டங்­கி­ய­போது, விமா­னத்தின் வால்­ப­கு­தியில் உணவு வண்­டி­யொன்­றுக்­கி­டையில் அகப்­பட்­டி­ருந்தார். 

 

விமா­னத்தின் வால்­ ப­கு­தி­யா­னது மரங்கள் அடர்ந்த அதி­க­ள­வான பனி ­பொ­ழிந்­தி­ருந்த பகு­தியில் வீழ்ந்­தது.

 

மரங்­களும் பனிப்­ப­டி­வு ­களும் ஒரு குஷன் போன்று அமைந்­ததால் விமா­னத்தின் வால்­ப­குதி நொருங்­காமல் இருந்­தது. 

 

விமானம் வீழ்ந்து சில மணித்­தி­யா­லங்­களின் பின், மீட்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களால் வெஸ்னா வுலோவிக் மீட்­கப்­பட்டார்.

 

அவர் மிக மோச­மாக படு­கா­ய­ம­டை­டைந்­தி­ருந்தார். மண்­டை­யோட் டில் வெடிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது, கால்கள், இடுப்பு எலும்பு, விலா எலும்­பு­களில் முறி­வுகள் ஏற்­பட்­டி­ருந்­தன.

 

வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட வெஸ்னா வுலோவிக் 10 நாட்கள் கோமா நிலையில் இருந்தார்.

 

சிறிது காலம் அவரின் உடல் இடுப்­புக்குக் கீழ் இயங்­க­வில்லை. அவரை குணப்­ப­டுத்­து­வ­தற்­காக பல்­வேறு சத்­தி­ர­சி­கிச்­சைகள் செய்­யப்­பட்­டன. 

 

பல மாதங்கள் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்த வெஸ்னா பின்னர் எழுந்து நட­மா­டி­ய­துடன் மீண்டும் யூகோஸ்லோவ் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் வேறொரு பணி­யில் இணைந்தார். எனினும், மேற்­படி விமான அனர்த்தம் குறித்த எந்த நினைவும் அவ­ருக்கு மீளத் திரும்­ப­வில்லை.  

 

 

2008 ஆம் ஆண்டு நியூயோர்க் டைம்­ஸுக்கு அளித்த செவ்­வி­யொன் றில், நான் உடைந்து நொறுங்­கினேன். மருத்­து­வர்கள் என்னை மீள ஒன்­றி­ணைத்­தனர்' எனக் கூறி­யி­ருந்தார்.

 

33,000 அடி (10,000 மீற்றர்) உய­ரத்­தி­லி­ருந்து பரசூட் உத­வி­யின்றி வீழ்ந்து உயிர்­ தப்­பி­யதால், உலகில் அதிக உய­ரத்­தி­லி­ருந்து பரசூட் இன்றி வீழ்ந்து உயிர் தப்பியவராக 1985ஆம் ஆண்டு வெஸ்னா வுலோவிக் கின்னஸ் சாதனையாளராக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

66 வயதான வெஸ்னா வுலோவிக், கடந்த வெள்ளிக்கிழமை சேர்பியா வின் தலைநகர் பெல்கிரேட்டிலுள்ள தனது வீட்டில் இறந்தார் என சேர்பிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அவரின் மர­ணத்துக்­கான காரணம் உட­ன­டி­யாக கண்­ட­றி­யப்­ப­ட­வில்­லை.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.