Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இசை உலகை சோகத்தில் ஆழ்த்திய பாடகர் ஜோர்ஜ் மைக்கலின் மரணம்!
2016-12-27 11:08:23

உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய பாடர் ஜோர்ஜ் மைக்கல் நேற்று முன்தினம் காலமானார். இவரின் மரணம் இசை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

தனது பாடசாலை நண்பரான அன்ட்ரு ரிட்ஜ்லேவுடன் இணைந்து 'Wham' எனும் இசை இரட்டையர் குழுவை ஜோர்ஜ் மைக்கல் 1980 ஆம் ஆண்டு ஸ்தாபித்தார்.

 

இந்த இரட்டையர் குழுவின் பாடல் பதிவுகளில 25 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் 1982 முதல்1986 ஆம் ஆண்டு வரை விற்பனையாகின. 1987 ஆம் ஆண்டு ஃபெய்த் எனும் பெயரில் தனது அல்பத்தை ஜோர்ஜ் மைக்கல் வெளியிட்டார். 

 

 

அந்த அல்பத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகின.1984 முதல் 2004 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பிரித்தானிய வானொலியில் அதிக தடவைகள் ஒலிபரப்பான பாடல்களுக்குரியவராக 2004 ஆம் ஆண்டு ஜோர்ஜ் மைக்கல் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

 

53 வயதான ஜோர்ஜ் மைக்கல் ஒக்ஸ்போர்ட்ஷயரிலுள்ள தனது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித் துள்ளனர்.

 

ஜோர்ஜ் மைக்கலின் மரணம் இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னிலை இசைக்கலைஞர்கள் உட்பட பலரும் ஜோர்ஜ் மைக்கலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.