Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
9 தம்­ப­தி­யி­னரால் உரிமை கோரப்­பட்ட 'சுனாமி பேபி - 81': உல­கையே திரும்பி பார்க்கச் செய்த ஜெய­ராசா அபிலாஷ் ; இன்றைய மாண­வ­னான அபி­லா­ஷுக்கு மாதாந்த கல்விச் செல­வுக்­காக இன்­னொரு மாண­வ­னால் வழங்­கப்­படும் 5,000 ரூபா நிதி உத­வு­தொகை
2016-12-27 12:25:23

(பெரி­ய­போ­ர­தீவு, புதிய காத்­தான்­குடி  நிரு­பர்கள்)         


ஆழிப் பேர­லை­யின்­போது அநா­த­ர­வாகக் காணப்­பட்டநிலையில் ஒன்­பது தம்­ப­தி­யி­னரால் உரி­மை­ கோ­ரப்­பட்ட “சுனாமிA பேபி 81“ என்று அழைக்­கப்­படும் அபி­லா­ஷுக்கு சுனாமி ஏற்­பட்டு 12 ஆவது வருட நினைவு நாளான நேற்று அவ­ரது எதிர்­காலக் கல்­விக்­கான பொறுப்பை ஒரு நிறு­வனம் ஏற்றுக் கொண்­டுள்­ளது.

 

 

குருக்கள் மடத்தில் அமைந்­துள்ள ஜெய­ராசா அபி­லாஷின் வீட்­டுக்குச் சென்ற விருட்சம் சமூக மேம்­பாட்டு அமை­யத்­தினர் அவ­ரது கல்­விக்­காக காசோ­லையை வழங்கிவைத்­தனர்.

 

சுனாமி பேபி - 81 என பன்­னி­ரெண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் உல­கையே திரும்பிப் பார்க்க வைத்­தவர் அபிலாஷ் என்னும் குழந்தை.

 

9 தம்­ப­தி­யினர் உரிமை கோரல்


 

ஆழிப்­பே­ரலை ஏற்­பட்­ட­போது ஆழிப்­பே­ர­லையின் கோரத்­ தாண்­ட­வத்தில் சிக்­குண்டு உயிர்பிழைத்த இரண்­டரை மாதக் குழந்­தை­யான அபி­லா­ஷுக்கு 9 தம்­ப­தி­யினர் உரிமை கோரி­யி­ருந்­தனர்.

 

கல்­முனை பாண்­டி­ருப்பைச் சேர்ந்த தற்­போது குருக்­கள்­ம­டத்தில் வசித்­து­வரும் ஜெய­ராசா - யுனிதா தம்­ப­தி­களின் அய­ராத முயற்­சியின் கார­ண­மாக மர­பணு பரி­சோ­தனை மூல­மாக நீதி­மன்­றத்தின் மூலம் தமது குழந்­தை தான் என்­பதை நிரூ­பித்­தனர்.

 

கல்விச் செல­வுக்கு மாதாந்தம் 5,000  ரூபாவை வழங்க ஏற்­பாடு


அன்று பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட சுனாமி பேபி 81 இப்­போது சுனாமி நினைவு தினத் தில் ஊட­கங்­களில் பேசப்­ப­டு­கின்­றான். இந்நி­லையில் விருட்சம் சமூக மேம்­பாட்டு அமை­யத்தின் ஆலோ­சகர் திரு­மகன் ஸ்ரீயின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க, அவரின் மகன் திரு­மகன் ஸ்ரீ சாயீஸ்வர் என்றும் மாணவன் சுனாமி பேபி 81 என அழைக்­கப்­படும் அபி­லா­ஷுக்­கான கல்­விக்­கான செலவை ஏற்று மாதந்­தோறும் 5,000 ரூபாவை வழங்க முன்­வந்­துள்ளார்.

 

 

சுனாமி பேபி 81 அபிலேஷ் பற்­றிய சில குறிப்­புக்கள்


2004 ஆம் ஆண்டு பேர­ழிவை ஏற்­ப­டுத்­திய சுனாமிப் பேர­லையில் சிக்கி அபூர்­வ­மான முறையில் உயிர்­தப்­பிய அபிலாஷ் அக்­ கா­லத்தில் உல­கத்­தையே தனது பக்கம் ஈர்த்­தவர்.

 

2004 ஆம் வருடம் உல­கையும் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­யையும் உலுக்­கிய சுனாமி அனர்த்தம் கார­ண­மாக இலங்­கையில் 34 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்தும்  காணாமல் போயும் இருந்­தனர்.  

 

தென்­னை­மர வட்­டுக்குள் ஓர் அலையும் மற்­றொரு அலை குப்­பை­ம­டு­விலும் கொண்டு போட்ட குழந்தை அபிலாஷ்


 

இவ்­வாறு காணாமல் போன­வர்­களில் கல்­முனை கடற்­க­ரை­யோர பிர­தேச வீடு ஒன்றில் பிறந்து இரண்­டரை மாதங்­களேயான ஒரு குழந்­தையும் அடங்­கி­யி­ருந்­தது.

 

தென்­னை­மர வட்­டுக்குள் சுனாமி அலை தூக்கிச் சென்று வைத்து பின்னர் அடுத்த அலையில் குப்பை மடு ஒன்றின் அருகில் தூக்கிவீசப்­பட்ட கைக்­கு­ழந்­தையை அய­ல­வர்கள் கண்­டு­பி­டித்­தி­ருந்­தனர்.

 

சுனாமி அனர்த்­தத்தில் அல்­லோல கல்­லோ­லப்­பட்­ட­வர்கள் தமது பிள்­ளை­க­ளையும். உற­வு­க­ளையும் பிரிந்து வெவ்­வேறு திசையில் ஓடிக்­கொண்­டி­ருந்­தனர்.

 

அச்­ச­ம­யத்­தில் தான் இக் குழந்­தையும் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு கல்­முனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தது. வைத்­தி­ய­சாலை வார்ட் இலக்­கத்தை மையப்­ப­டுத்தி ‘சுனாமி பேபி 81’ என அழைக்­கப்­பட்ட குழந்தை.

 

இக் கைக்­கு­ழந்தை அனு­ம­திக்­கப்­பட்ட (வாட்) விடுதி இலக்கம் 81 ஆகையால் இக்­கு­ழந்தை ‘சுனாமி பேபி 81’ என அன்று அழைக்­கப்­பட்­டி­ருந்­தது. இக்­ கு­ழந்­தைக்கு உரிமை கோர எவ­ரு­மில்லை என அறிந்த பலர் அக் ­கு­ழந்­தையை தம்­மோடு கொண்டு செல்­வ­தற்கு, இது தனது குழந்தை தான் எனக் கூறிக்­கொண்டு பல பெற்­றோர்கள் வைத்­தி­ய­சா­லைக்கு படை­யெ­டுக்கத் தொடங்­கினர்.

 

 

ஒரு குழந்­தைக்கு 9 பெற்றோர் உரிமை கோரி வைத்­தி­ய­சா­லைக்கு படை­யெ­டுக்கத் தொடங்­கி­ய­தை­ய­டுத்து வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் இவ்­ விட­யத்தை நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்கு கொண்டு சென்றது.

 

மரபணுவில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையான பெற்றோர்


இறுதியில் நீதிமன்றம் மரபணு பரிசோதனை மூலம் குழந்தையின் உண்மைப் பெற்றோர் யார் எனக் கண்டறிந்து குழந்தையை உரிய பெற்றோர்களிடம் அன்று கையளித்திருந்தது.

 

கல்முனை – பாண்டிருப்பைச் சேர்ந்த் ஜெயராஜ் யுனிதா தம்பதிகளின் புதல்வன் ஜெயராஜ் அபிலாஷ் என மரபணு பரிசோதனை மூலம் நிருபிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்தது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.