Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கால­மானார் என பிர­பல நிறு­வ­னத்தின் டுவிட்டர் பக்­கத்தில் தகவல்; இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்­களின் செயலால் அதிர்ச்­சி­ய­டைந்த ரசி­கர்கள்
2016-12-28 12:19:22

உலகப் புகழ்­பெற்ற அமெ­ரிக்க பொப்­பிசைப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இறந்­து­விட்டார் என சோனி மியூசிக் நிறு­வ­னத்தின் உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் பக்­கத்தில் செய்தி வெளி­யா­னதால் மேற்­கு­லக இசைத்­துறை அதிர்ச்­சியில் உறைந்­தது.

 

ஆனால், அச்­ செய்தி இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்கள் வேலை என்­பது பின்னர் தெரிய வந்­தது. 35 வய­தான பிரிட்னி ஸ்பியர்ஸ் பல தசாப்­தங்­க­ளாக பொப்­பிசை உலகின் முன்­னிலைப் பாட­கி­களில் ஒரு­வ­ராக விளங்­கு­கிறார்.

 

உலகின் பல பாகங்­க­ளிலும் அவ­ருக்கு கோடிக் கணக்­கான ரசி­கர்கள் உள்­ளனர்.

 

இந்­நி­லையில், பிரிட்னி ஸ்பியர்ஸ் கால­மானார் என நேற்­று ­முன்­தினம்  தகவல் வெளி­யா­னது. இத்­ த­கவல் உண்மை என்றே பலர் எண்­ணினர். ஏனெனில் சோனி மியூசிக் நிறு­வ­னத்தின் உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் பக்­கத்­தி­லேயே இத்­ த­கவல் வெளி­யா­னது.

 

ஜப்­பா­னிய எலக்ட்­ரோனிக் நிறு­வ­ன­மான சோனி நிறு­வ­னத்தின் ஒரு துணை நிறு­வ­னமே சோனி மியூசிக் நிறு­வனம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பிரிட்னி ஸ்பியர் இறந்­து­விட்டார் என தகவல் வெளி­யான போதிலும் பிரிட்னி ஸ்பியர்ஸ் தரப்­பி­லி­ருந்து எவ்­வித பதிலும் உட­ன­டி­யாக வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

 

பிரிட்னி ஸ்பியர்ஸின் டுவிட்டர் பக்­க­மா­னது டிசெம்பர் 23 ஆம் திக­திக்குப் பின்னர் எவ்­வித பதி­வு­களும் தர­வேற்­றப்­ப­டாமல் கிடந்­தது. இதனால், ரசி­கர்கள் மத்­தியில் துயரம் பரவ ஆரம்­பித்­தது.

 

பலர் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் பிரிட்­னிக்கு அஞ்­சலி செலுத்த ஆரம்­பித்­தனர். பிரித்­தா­னிய பாடகர் ஜோர்ஜ் மைக்கல் இறந்த துய­ரத்­துக்கு மத்­தியில் பிரிட்னி ஸ்பியர்ஸும் இறந்­து­விட்­டாரே என சிலர் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

 

 

ஆனால், பிரிட்னி ஸ்பியர்ஸ் இறக்­க­வில்லை அவர் உயி­ருடன் இறக்­கிறார் என சோனி மியூசிக் நிறு­வனம் பின்னர் தெரி­வித்­தது. தமது டுவிட்டர் பக்கம் இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்­களால் (ஹேக்கர்ஸ்) ஊடு­ரு­வப்­பட்டு இந்த பொய்­யான தகவல் வெளி­யி­டப்­பட்­ட­தாக அந்­ நி­று­வனம் தெரி­வித்­தது. 

 

இச்­ செய்தி தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியமைக்காக மன்னிப்புக் கோரு வதாகவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்னி ஸ்பியர்ஸ் நலமாக இருக்கிறார் என்பதை அவரின் முகாமையாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.