Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இந்­திய பெண்ணின் வங்கிக் கணக்கில் திடீ­ரென 100 கோடி ரூபா மிகுதி; பணம் எவ்­வாறு கணக்­குக்கு வந்­தது என்­பதை அறிய உத­வு­மாறு இந்­திய பிர­தமர் அலு­வ­ல­கத்­திடம் கோரு­கிறார்
2016-12-28 15:07:56

இந்­தி­யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் திடீ­ரென சுமார் 100 கோடி இந்­திய ரூபா (சுமார் 220 கோடி இலங்கை ரூபா) மிகு­தி­யாக இருப்­பதை அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன், இப்­ பணம் எவ்­வாறு தனது வங்கிக் கணக்­குக்கு வந்­தது என்­பதை அறிந்­து­கொள்­வ­தற்­காக இந்­திய பிர­தமர் அலு­வ­ல­கத்தின் உத­வியை நாடி­யுள்ளார்.

 

 

உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த ஷீட்டல் யாதவ் எனும் இப் பெண், மீரத் நக­ரி­லுள்ள அரச வங்­கி­யான ஸ்டேட் பாங்க் ஒவ் இண்­டி­யாவின் கிளையில் கணக்கு வைத்­தி­ருக்­கிறார். 

 

மாதாந்தம் 5,000 இந்­திய ரூபா வரு­மானம் பெறு­பவர் இவர். கடந்த 18 ஆம் திகதி இவர் தனது வீட்­டுக்கு அரு­கி­லுள்ள வங்­கி­யொன்றின் ஏ.ரி.எம் இயந்­தி­ரத்தின் மூலம் பணம் மீளப் பெறு­வ­தற்கு சென்­ற­போது அவரின் கணக்கில் மிகு­தி­யாக 99,99,99,394 இந்­திய ரூபா காட்­டப்­பட்­டது.

 

அதா­வது, 100 கோடி இந்­திய ரூபா­வுக்கு 604 ரூபாவே குறைவு. தனது கணக்கில் சுமார் 100 கோடி ரூபா இருப்­ப­தாக ஏ.ரி.எம். இயந்­திரம் காட்­டி­யதை ஷீட்டல் யாத­வினால் நம்ப முடி­ய­வில்லை.

 

அதனால், தனக்கருகில் வரி­சையில் காத்­தி­ருந்த மற்­றொ­ரு­வரை அழைத்து தனது கணக்கில் நிலு­வை­யாக உள்ள தொகையை பார்க்­கும்­படி கூறினார். அந் ­ந­பரும் 99,99,99,394 கோடி ரூபா மிகு­தி­யாக இருப்­பாக கூறினார்.

 

மறுநாள் மற்­றொரு வங்­கியின் ஏ.ரி.எம். இயந்­தி­ரத்தில் தனது கணக் கில் நிலுவைத் தொகையை சோதித்­த­போ­திலும் அத்தொகை மூலம் காட்­டப்­பட்­டது.

 

இப் ­பணம் எவ்­வாறு தனது கணக்­குக்கு வந்­தது என்­பது தொடர்­பாக தனது வங்கி அதி­கா­ரிகள் முறை­யாக விளக்கம் அளிக்­க­வில்லை என ஷீட்டல் யாதவ் கூறு­கிறார்.

 

இது தொடர்­பாக தனது கணவர் சைலேந்தர் சிங்­குடன் இணைந்து, இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கு மின்­னஞ்சல் மூலம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

 

தனது மனைவி பொதி­யிடல் நிறு­வ­ன­மொன்றில் பணி­யாற்றி 5,000 ரூபா மாதாந்த வரு­மானம் பெறு­பவர் எனவும் தனக்கும் சொற்ப தொகையே வரு­மா­ன­மாக கிடைப்­ப­தா­கவும் சைலேந்தர் சிங் தெரி­வித்­துள்ளார்.

 

“அதி­க­பட்­ச­மாக 50,000 ரூபாவே ஒரே தட­வையில் வைப்புச் செய்­யலாம் என கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், 100 கோடி ரூபா எங்கிருந்து வந்தது என அறிய உதவுமாறு டிசெம்பர் 26 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்” எனவும் சைலேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.