Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புத்­தாண்டை வர­வேற்கும் நேரடி இசை நிகழ்ச்­சியில் வெறு­மனே வாய­சைத்து அம்­ப­ல­மான பாடகி மரியா கெரி
2017-01-02 14:56:43

அமெ­ரிக்­காவின் பிர­பல பாடகி மரியா கெரி, இசை நிகழ்ச்­சி­யொன்­றின்­போது பாடல்­களைப் பாடாமல், ஏற்­கெ­னவே பதி­வு­ செய்­யப்­பட்ட பாட­லுக்கு வாய­சைத்துக் கொண்­டி­ருந்­தமை அம்­ப­ல­மா­னதால் சங்­க­டத்­துக்­குள்­ளானார்.

 

மரியா கெரி


 

நியூயோர்க் நகரின் டைம்ஸ் சதுக்­கத்தில், புத்­தாண்டுப் பிறப்பை முன்­னிட்டு நேற்­று­ முன்­தினம் இரவு நடை­பெற்ற கொண்­டா­டங்­க­ளி­லேயே பாடகி மரியா கெரிக்கு இந்தச் சங்­கடம் ஏற்­பட்­டது.

 

இந் ­நி­கழ்வில் பல்­வேறு கலை­ஞர்­களின் இசை நடன நிகழ்ச்­சிகள் நடை­பெற்­றன. நேற்­று­ முன்­தி­னத்­துடன் ஐ.நா.செய­லாளர் நாயகம் பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பான் கீ மூன், அவரின் பாரியார் யூ சூன் தேக் உட்­பட இலட்­சக்­க­ணக்­கானோர் இந்­ நி­கழ்வில் பங்­கு­பற்­றினர்.

 

 

37 வய­தான பாடகி, மரியா கெரி, 2010 ஆம் ஆண்டு வெளி­யிட்ட தனது 'ஆல்ட் லாங் சின்' பாட­லுடன் தனது நிகழ்ச்­சியை ஆரம்­பித்தார். 1991 ஆம் ஆண்டு வெளி­யாகி பெரும் வர­வேற்பைப் பெற்ற தனது பாட­லான 'எமோஷன்ஸ்' பாடலை இரண்­டா­வ­தாக மரியா கெரி பாட ஆரம்­பித்தார்.

 

பாடலை நேர­டி­யாக பாடாமல், பதி­வு ­செய்­யப்­பட்ட பாட­லுக்கு வாய­சைத்துக் கொண்டு தனது குழு­வினர் சகிதம் ஆடிக்­கொண்­டி­ருந்தார் மரியா கெரி.

 

ஆனால், அவரின் சொந்த பாடல் ­வ­ரி­க­ளையே அவரால் சரி­யாக செவி­ம­டுக்க முடி­ய­வில்லை.

 

அதனால், பாட­லுக்­கேற்ப வாய­சைப்­ப­தற்கு சிர­மப்­பட்டு, திடீ­ரென அப்­ப­டியே நின்­று­விட்டார் மரியா.

 

அவர் அவ்­வ­ளவு நேரமும் வெறு­மனே வாய­சைத்துக் கொண்­டி­ருந்தார் என்­பது இதன்மூலம் அம்­ப­ல­மா­கி­யது. அதன்பின் ரசி­கர்­களை சமா­ளிக்கும் வித­மாக, 'நாம் இந்த பாடலை சரி­பார்த்­துக் ­கொள்­ள­வில்லை. நான் ரசி­கர்­களை பாடு­வ­தற்கு விடு­கிறேன்' எனக் கூறினார் மரியா கெரி.

 

எனினும், சமூக வலைத்­த­ளங்­களில் கடும் விமர்­ச­னங்­க­ளுக்கும் கிண்­டல்­க­ளுக்கும் மரியா கெரி ஆளானார். இந் நிகழ்வில் பல இலட்சம் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

 

பாதுகாப்புக்காக சுமார் 7,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிரு ந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

பாரியாருடன் பான் கீ மூன்

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.