Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள் 11 வருடங்களின் பின் வைத்தியசாலையிலிருந்து சிறுவர் இல்லத்துக்கு மாற்றப்பட்டனர்
2017-01-03 12:59:11

இந்தியாவில் ஒட்டிப் பிறந்த இரு சகோதரிகள் 11 வருடங்களுக்கு மேலாக வைத்தியசாலை ஒன்றில் தங்கியிருந்த நிலையில், சிறுவர் இல்லமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

 

வீணா, வாணி எனும் இச்சகோதரிகள் 14 வயதானவர்கள். இவர்கள் பிறக்கும் போது இருவரின் தலைகளும் ஒன்றுட னொன்று ஒட்டியி ருந்தன. கடந்த 11 வருடங்களாக இவர்கள் ஹைதராபாத் நகரிலுள்ள வைத்தியசாலை யொன்றிலேயே தங்கியிருந்தனர்.

 

சிறிய அறையொன்றில் நீண்ட காலமாக தங்கியிருந்ததால் சுகாதார பிரச்சினைகளை இவர்கள் எதிர்கொண்டனர். வீணாவும், வாணியும் தங்க வைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் பொருத்தப்பட்டிருந்த வாயு சீராக்கி முறையாக இயங்கவில்லை எனவும், காற்றோட்ட வசதி இல்லாததால், இச் சிறுமிகள் தோல் நோய்கள் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தொண்டர் நிறுவனங்கள் தெரிவித் திருந்தன.

 

 

இந்நிலையில், இச் சகோதரிகள், அரசாங்கத்தினால் நடத்தப்படும் சிறுவர் விடுதி யொன்றுக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டனர். இதன்மூலம் இச் சகோதரி கள் ஆரோக்கியமான சூழலில் வாழ்வ தற்கும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

எனினும், நீண்ட காலமாக தாம் தங்கியிருந்த வைத்தியசாலை யிலிருந்து வெளியேறிச் செல்வது இச்சகோதரிகளுக்கும் வைத்திய சாலை ஊழியர் களுக்கும் மனோரீதியில் கடினமானதாகவே இருந்ததாம்.

 

 

'இச் சகோதரிகளுக்கு ஒரு வருடமாக கல்வி போதித்த ஆசிரியையான வி.அனூஷா கூறுகையில், 'இந்த இரட்டையர்களுடன் நான் உணர்வு பூர்வமாக பிணைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் என்னை தமது மூத்த சகோதரியாக கருதினர்' எனத் தெரிவித்துள்ளார்.

 

இச் சிறுமிகள் மிகுந்து புத்திகூர்மையானவர்கள். அவர்களில் ஒருவர் மிக சிறப்பாக பாடுகிறார் என சிறுவர் இல்லத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.