Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஆடம்­பர வாழ்க்கை நடத்தும் கினி­யாவின் உப ஜனா­தி­பதி மீதான ஊழல் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக பிரெஞ்சு நீதி­மன்றில் விசா­ரணை ஆரம்பம்
2017-01-04 15:40:08

ஆபி­ரிக்க நாடான கினி­யாவின் ஜனா­தி­ப­தி யின் மகனும் அந்­நாட்டு உப ஜனா­தி­
ப­தி­யு­மான தியோ­டோரோ ஒபியாங் மீதான ஊழல் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­ பாக பிரான்­ஸி­லுள்ள நீதி­மன்­றத்தில் வழக்கு விசா­ரணை ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.

 

ஆடம்­பர வாழ்க்கை நடத்தும் தியோ­டரோ ஒபி­யாங்கின் ஏரா­ள­மான சொத்­துகள் குறித்த விப­ரங்­களும் இவ் ­வ­ழக்கு விசா­ர­ணையில் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

 

ஆபி­ரிக்கக் கண்­டத்தின் மேற்குப் பகு­தியில் புவி மத்­திய கோட்டில் அமைந்­துள்ள சிறிய நாடு கினியா. 28,000 சது­ர­கி­லோ­மீற்றர் பரப்­ப­ளவு கொண்ட நாடு இது. சுமார் 12 இலட்சம் மக்கள் அங்கு வசிக்கின்றனர்.

 

கினி­யாவின் பெரும்­பான்­மை­யான மக்கள் வறு­மைக்­கோட்டின் கீழ் வாழ்­ப­வர்கள். ஆனால், அந்­நாட்டின் ஜனா­தி­ப­தியின் குடும்பம் செல்­வத்தில் மிதக்­கி­றது.


கினி­யாவின் துணை ஜனா­தி­ப­தி ஒபியாங்


 

கினி­யாவின் ஜனா­தி­ப­தி­யாக தியோ­டோரோ ஒபியாங் நெயுமா எம்­ப­சோகோ பதவி வகிக்­கிறார். ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த தனது உற­வி­னரை 1979 ஆம் ஆண்டு இரா­ணுவப் புரட்சி மூலம் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு ஆட்­சியைக் கைப்­பற்­றி­யவர் தியோ­டரோ ஒபியாங் நெயுமா எம்­ப­சோகோ.

 

ஆபி­ரிக்க நாடு­களின் ஜனா­தி­ப­தி­களில் பெரும் செல்­வந்­தர்­களில் ஒருவர் எம்­ப­சோகோ. இவரின் சொத்து மதிப்பு சுமார் 60 கோடி அமெ­ரிக்க டொலர் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 

 

இவரின் மூத்த மகன் தான் தியோ­டோரோ ஒபியாங். 47 வய­தான ஒபியாங், அந்­நாட்டின் பல்­வேறு அமைச்சுப் பொறுப்­பு­களை வகித்த பின்னர் கடந்த வருடம் உப ஜனா­தி­ப­தி­யாக தனது தந்­தை­யினால் நிய­மிக்­கப்­பட்டார்.

 

 

வரு­டாந்தம் 3,300 டொலர் (5 இலட்சம் ரூபா) ஊதியம் பெறு­பவர் தியோ­டோரோ ஒபியாங். ஆனால், விமா­னங்கள், உல்­லாசப் பட­குகள், ஆடம்­பர வாக­னங்கள், பல நாடு­களில் மாளி­கைகள் உட்­பட ஏரா­ள­மான சொத்­து­களை வாங்கிக் குவித்­துள்ளார் இவர்.

 

பொப்­பிசை சக்­க­ர­வர்த்தி மைக்கல் ஜக்­ஸனின் கை
யு­றை­யொன்­றையும் ஏலத் தில் வாங்­கி­ய­மைக்­காக உல­கெங்கும் செய்­தி­களில் இடம்­பெற்­றவர் ஒபியாங்.


அமெ­ரிக்க வங்­கி­யொன்றில் இவரின் குடும்­பத்­தினர் இர­க­சிய கணக்கு வைத்­தி­ருப்­பது 2011 ஆம் ஆண்டு அம்­ப­ல­மா­கி­யது.

 

இதனால் தனது சொத்­துக்கள் சில­வற்றை கைவிடும் நிலைக்கு ஒபியாங் தள்­ளப்­பட்டார்.

 

லஞ்சம் மற்றும் ஊழல் மூலமே பெரு­ம­ள­வான பணத்தை ஒபியாங் சேர்த்தார் என குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பா­கவே தியோ­டோரோ ஒபி­யாங்­குக்கு எதி­ராக வழக்­குகள் நடை­பெ­று­கின்­றன.

 

பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒபி­யாங்­குக்கு சொந்­த­மான 10 கோடி யூரோ பெறு­ம­தி­யான மாளி­கை­யொன்றை பிரெஞ்சுப் பொலிஸார் 2012 ஆம் ஆண்டு முற்­று­கை­ யிட்­டனர். அம்­ மா­ளி­கையில் மில்­லியன் கணக்­கான யூரோ பெறு­ம­தி­யான பொருட்கள் இருப்­பதை பிரெஞ்சுப் பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

 

அதன்பின் ஒபியாங் மீது பணச்­ச­லவை மோசடி மற்றும் ஊழல் குற்­றச்­சாட்­டுகள் சுமத்தி பிரெஞ்சு நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடுக்­கப்­பட்­டது. அவரை கைது செய்­வ­தற்கும் பிரெஞ்சு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.

 

 

 

இந்நிலையில், தியோடோரோ ஒபியாங்குக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் பிரெஞ்சு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆரம்ப மாகியன. பல வாரங்களுக்கு இவ் விசாரணைகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.