Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
போதைப்­பொருள் விவ­காரம் கார­ண­மாக லெப­னா­னிய அழ­கு­ராணி சிட்­னியில் கைது; அழ­கு­ராணி பட்­டத்தை பறிப்­ப­தற்கு ஏற்­பாட்­டா­ளர்கள் தீர்­மானம்
2017-01-05 15:32:07

காருக்குள் போதைப்­பொருள் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் லெபனான் அழ­கு­ராணி ஒரு­வரை அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இதனால், இந்த யுவ­தியின் அழ­கு­ராணி பட்­டத்தை பறிப்­ப­தற்கு போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

 

 

நஜாஹ் கம்­ரவி எனும் இந்த யுவதி, அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் லெபனானி­யர்­க­ளுக்­கான 'மிஸ் லெபனான் இமி­கரண்ட் ஒஸ்ட்­ரே­லியா' அழ­கு­ராணி போட்­டி யில் முத­லிடம் பெற்­றவர். 

 

கடந்த வருடம் ஜூலை மாதம் இப் ­போட்டி நடை­பெற்­றது. 'மிஸ் லெபனான் இமி­கரண்ட் ஒஸ்ட்­ரே­லியா' போட்­டியின் நடப்பு அழ­கு­ரா­ணி­யாக அவர் விளங்­கு­கிறார்.

 

இந்­நி­லையில், கடந்த மாதம் 21 ஆம் திகதி சிட்னி பொலி­ஸாரால் நஜாக் கம்­ரவி கைது செய்­யப்­பட்டார். அவர் செலுத்திச் சென்ற காரில் போதைப்­பொருள் காணப்­பட்­ட­மையே இதற்­கான காரணம்.

 

சிட்னி நகரின் மேற்குப் பகு­தி­யி­லுள்ள பல வீதி­களில் அனு­மா­னிக்க முடி­யா­த­வாறு வேக­மாக தனது காரை நஜாஹ் கம்­ரவி செலுத்­திச்செல்ல, பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்­தனர்.

 

 

நஜாஹ்வின் காரின் டயர் ஒன்று வெடித்­ததால் காரை நிறுத்த வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்டார். அக்­ காரில் ஆண் ஒரு­வரும் பயணம் செய்தார்.

 

நஜாஹ்­வையும் அவ­ருடன் இருந்த 20 வய­தான இளை­ஞ­ரையும் பொலிஸார் விசா­ரித்த பின்னர், காருக்குள் சோதனை நடத்­தினர். அப்­போது 22 கிராம் அளவு மெத்­தாம்­பெட்­டமைன் (மெத்) எனும் போதைப்­பொருள் காரி­லி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டது.

 

 

அதை­ய­டுத்து அவ்­வி­ரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­தனர். வாகனம் செலுத்தும் போது ஆச­னப்­பட்டி அணி­யாமை போன்ற குற்­றங்­க­ளுக்­காக அன்­றைய தினம் நள்­ளி­ரவில் நஜாஹ்­வுக்கு 1,350 அவுஸ்­தி­ரே­லிய டொலர் அப­ராதம் விதிக்­கப்­பட்­டது

 

நஜாஹ்­வுடன் இருந்த இளைஞர் போதைப்­பொருள் விநி­யோகம் செய்­­பவர் என பொலிஸார் தெரி­வி­த்­துள்­ளனர். அந்த இளை­ஞ­ருக்கு எதி­ராக வழக்கு பதி­வு ­செய்­யப்­பட்­டுள்­ளது. அவர் அடுத்த மாதம் 22 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜ­ராக­வுள்ளார்.

 

இந்­நி­லையில், நஜாஹ் கம்­ர­வியின் அழ­கு­ராணி பட்­டத்தை பறிப்­ப­தற்கு தாம் தீர்­மா­னித்­துள்­ள­தாக 'மிஸ் லெபனான் இமி­கரண்ட் ஒஸ்ட்­ரே­லியா' அழ­கு­ராணி போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

 

நஜாஹ்வுடன் தொடர்பு கொள்வதற்கு தாம் தீவிரமாக முயன்று வருவதாகவும் ஆனால், அவர் தொலைபேசி அழைப்புகளுக்கோ மின்னஞ்சல்களுக்கோ பதில ளிக்கவில்லை எனவும் அழகுராணி போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித் துள்ளனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.