Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
டொனால்ட் ட்ரம்பின் பிரசார சுலோகம் பொறிக்கப்பட்ட தொப்பியை நீதிமன்றில் அணிந்திருந்த கனேடிய நீதிபதி இடைநிறுத்தம்
2017-01-10 11:02:19

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்பின் பிரசார சுலோ­க­மான Make America Great Again” (அமெ­ரிக்­காவை மீண்டும் மகத்­தா­ன­தாக்­குங்கள்) எனும் சுலோகம் பொறிக்­கப்­பட்ட தொப்­பி­யொன்றை நீதி­மன்­றத்தில் அணிந்­தி­ருந்த கனேடிய நீதி­பதி ஒருவர் பணி­யி­லி­ருந்து இடைநிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ளார். 

 

 

ஒன்­டா­ரியோ மாநி­லத்தைச் சேர்ந்த பேர்ன்ட் ஸபெல் எனும் நீதி­ப­தியே இவ்­வாறு இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஏ.எவ்.பி. தெரி­வித்­துள்­ளது. 

 

'அமெ­ரிக்­காவை மீண்டும் மகத்­தா­ன­தாக்­குங்கள் எனும் சுலோ­கத்­துடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­சாரம் செய்த டொனால்ட் ட்ரம்ப் பலர் எதிர்­பா­ராதவகையில் அத்­ தேர்­தலில் வெற்றி பெற்றார். 

 

 

இத்­ தேர்தல் பெறு­பேறு வெளி­யா­கிய நவம்பர் 9 ஆம் திகதி ஹமில்டன் நக­ரி­லுள்ள நீதி­மன்­றத்தில் வழக்கு விசா­ரணை ஒன்றை நடத்­திய நீதி­பதி பேர்ன்ட் ஸபெல், டொனால்ட் ட்ரம்பின் சுலோகம் பொறிக்­கப்­பட்ட தொப்­பியை அணிந்­தி­ருந்தார். 

 

இது தொடர்­பாக கனே­டிய குற்­ற­வியல் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆட்­சேபம் தெரி­வித்­தி­ருந்­தது.

 

இந்­நி­லையில், கடந்த மாதம் 21 ஆம் திகதி, வழக்கு விசா­ர­ணை­யொன்றில் பங்­கு­பற்­று­வ­தி­லி­ருந்து நீதி­பதி பேர்ன்ட் ஸபெல் தடுக்­கப்­பட்டார் என கனே­டிய ஊட­கங்கள் கடந்த வெள்­ளிக்
­கி­ழமை தெரி­வித்­துள்­ளன.

 

1990 ஆம் ஆண்டு நீதி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட பேர்ன்ட் ஸபெல், தனது சக நீதி­ப­திகள் அனை­வரும் ஹிலா­ரியின் ஆத­ர­வா­ளர்­க­ளாக இருந்­தனர் எனவும் தான் மாத்­திரம் ட்ரம்­புக்கு ஆத­ர­வா­ன­வ­ரா­க இருந்­த­தாகவும் தெரி­வித்­துள்­ளனர்.

 

தனது சகாக்­களின் விமர்­ச­னங்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில், மேற்­படி தொப்­பியை தான் அணிந்­தி­ருந்­தாக அவர் கூறினார். 

 

எனினும், நீதி­பதி எனும் வகையில் அர­சியல் நடு­நி­லையை வெளிப்­ப­டுத்த வேண்­டியநிலையில், தொடர்ச்சியாக டொனால்ட் ட்ரம்புக்கு வெளிப்படையான ஆதரவை நீதிபதி பேர்ன்ட் ஸபெல் வெளியிட்டு வந்தார் என பல முறைப்பாடுகள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.