Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மார்­ப­கங்­களை பெரி­தாக்­கு­வ­தற்குப் பணம் சேக­ரிப்­ப­தாகக் கூறி லண்டன் வீதியில் யாசகம் பெற்ற நோர்வே மொடல்
2017-01-10 15:13:11

நோர்­வேயை சேர்ந்த மொடல் ஒருவர் நீச்­ச­லுடை மாத்­திரம் அணிந்தநிலையில், லண்டன் வீதி­யோ­ரத்தில் நின்­று­கொண்டு, தனது மார்­ப­கங்­களை பெரி­தாக்­கு­வ­தற்கு பொது­மக்­க­ளிடம் யாசகம் பெற்று பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார்.

 

 

ஜூலியன் ஸ்னேக்­ஸடட் எனும் இந்த யுவ­தியே இவ்­வாறு விசித்­திர நோக்­கத்­துக்­காக பணம் சேக­ரிப்­பதாகக் கூறி யாசகம் பெற்றார். பிரித்­தா­னிய தலை­நகர் லண்­ட­னி­லுள்ள வீதி­யொன்றில் கறுப்பு நிற நீச்­ச­லுடை மாத்­திரம் அணிந்த நிலையில் இவர் நின்­று­கொண்­டி­ருந்­த­துடன், தான் ஒரு மொடல் எனவும் மார்­பக சத்­திர சிகிச்­சைக்­காக பணம் தேவைப்­ப­டு­வ­தா­கவும் எழு­தப்­பட்ட பதா­கை­யொன்­றையும் ஏந்­தி­யி­ருந்தார்.

 

ஜூலி­ய­னுக்கு சிலர் பணம் கொடுத்­தனர். ஆனால், வேறு பலர் அவரின் நட­வ­டிக்­கையால் அதி­ருப்தி தெரி­வித்­தனர். குறிப்­பாக பெண்கள் பலர், வெளிப்­ப­டை­யா­கவே தமது அதி­ருப்­தியை தெரி­வித்­தனர்.

 

ஜூலி­ய­னுக்கு அறி­வுரை கூறிய பெண் ஒருவர், 'அழகு என்­பது வெளித்­தோற்­றத்­துடன் மாத்­திரம் தொடர்­பா­ன­தல்ல.

 

அது உள்­ளி­ருந்து வரு­வது. நீங்கள் அதை எவ்­வாறு வெளிப்­ப­டுத்­து­கி­றீர்கள் என்­பதில் இது தங்­கி­யுள்­ளது' எனக் கூறினார்.

 

தனது 5,000 ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 900,000 ரூபா) தேவைப்­ப­டு­வ­தாக ஜூலியன் தெரி­வித்தார். அவ்­ வ­ழியே சென்ற பலர் ஜூலி­ய­னுக்கு பணம் வழங்­கிய நிலையில் சிலர் அவ­ருடன் செல்பீ படம்­பி­டித்­துக்­கொண்­டனர்.

 

அதே­வேளை, ஜூலியன் அருகில் வந்த நபர் ஒருவர், தன்­னுடன் ஓரி­ரவு தங்­கினால் 1,000 ஸ்ரேலிங் பவுண்கள் வழங்­கு­வ­தாக கூறினார். இதற்கு ஜூலியன் மறுப்புத் தெரி­வித்தார். இக்­ காட்­சிகள் அனைத்தும் வீடி­யோவில் பதி­வாகிக் கொண்­டி­ருந்­தன.

 

ஆனால், உண்­மை­யி­லேயே மார்­ப­கங்­களை பெரி­தாக்­கு­வ­தற்­கான சத்­தி­ர
­சி­கிச்சை செய்­து­கொள்ளும் எண்­ணத்தை ஜூலியன் கொண்­டி­ருக்­க வில்லை. யூரியூப் நகைச்­சு­வை­யாளர் டென்ஜிஸ்வ் என்­பவர் ஏற்­பாடு செய்த சோத­னை­யொன்­றி­லேயே மொடல் ஜூலியன் பங்­கு­பற்­றினார் என்­பது பின்னர் தெரிய வந்தது.

 

யாசகத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட பணம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனமொன்றுக்கு அன்பளிப்பு செய்யப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.