Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தாக்­குதல் குற்­றச்­சாட்டில் கிரீ­டத்தை இழந்த முன்னாள் அழ­கு­ராணி; பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராக பணி­யாற்­ற­வுள்ளார்
2017-01-11 14:56:57

அமெ­ரிக்­காவில் இரு நபர்­களைத் தாக்­கி­யமை தொடர்­பான வழக்கில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட முன்னாள் அழ­கு­ராணி ஒருவர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராகப் பணி­யாற்­ற­வுள்ளார்.

 

28 வயதான டேனி­யலா கெஸ்கீ எனும் இந்த யுவதி, 2010 ஆம் ஆண்டு கென்­டக்கி மாநி­லத்தின் மிஸ் கென்­டக்கி லத்­தினா அழ­குரா­ணி­யாகத் தெரி­வு­ செய்­யப்­பட்­டவர்.

 

2010 ஆம் ஆண்டில் இரு நபர்­களை தாக்­கி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது. எரி­பொருள் நிரப்பு நிலை­ய­மொன்றில் இத்­ தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

 

எரி­பொருள் நிரப்பு நிலை­யத்தின் உள்ளே செல்­வ­தற்கு டேனி­ய­லாவை அங்­குள்ள பெண் ஊழியர் ஒருவர் அனு­ம­திக்க மறுத்­த­போது, அந்த ஊழி­யரின் கழுத்தை பேனா ஒன்­றினால் டேனி­யலா குத்­தி­ய­தாக பொலிஸார் தெரி­வித்­தி­ருந்­தனர்.

 

அத்­துடன், மருந்­தகம் ஒன்றை நோக்கிச் சென்ற டேனி­யலா, மருந்­த­கத்தின் கதவை உதைக்க ஆரம்­பித்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தி­ருந்­தனர். எரி­பொருள் நிரப்பு நிலை­யத்தில் தாக்­கப்­பட்ட பெண் ஊழி­ய­ரான மேரி ஆன் மெக்­கினி இது தொடர்­பாக அளித்த செவ்­வி­யொன்றில், 'டேனியலாவிடம் என்ன பிரச் சினை என நான் கேட்டேன்.

 

 

அதன்பின் என்னை  அவர் தாக்கத் தொட ங்­கினார்' எனக் கூறி­யி­ருந்தார். நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது, இரு குற்­றச்­சாட்­டு­களை டேனியலா ஒப்­புக்­கொண்டார்.

 

இதனையடுத்து அவர் துப்­பாக்கி வைத்­தி­ருப்­ப­தற்கு இருவரு­ட­கால தடை விதித்து நீதி­மன்றம் தீர்ப்பளித்­தது. அதன்பின், அனு­ம­தி­யுடன் தான் வைத்­தி­ருந்த பிஸ்­டலை அதி­கா­ரி­க­ளிடம் டேனி­யலா ஒப்­ப­டைத்தார்.

 

 

எனினும், துப்­பாக்­கியை ஒப்­ப­டைப்­ப­துடன் மாத்­திரம் அவரின் பிரச்­சி­னைகள் முடி­வுக்கு வர­வில்லை. டேனியலா ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட குற்­ற­ச்சாட்டில் அழ­கு­ராணி பட்­டத்தை அவ­ரி­ட­மி­ருந்து பறிக்­கப் ­போ­வ­தாக போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­தனர்.

 

அதனால், தனது அழ­கு­ராணி கிரீ­டத்தை டேனி­யலா ஏற்­பாட்­டா­ளர்­
க­ளிடம் ஒப்­ப­டைத்தார். பின்னர் அவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒரு­வரை திரு­மணம் செய்தார்.

 

 

இந்­நி­லையில், அல­பாமா மாநி­லத்தின் மோபில் நகரில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராக டேனி­யலாவும் இணைந்­துள்ளார். மோபில் நகர பொலிஸ் திணைக்­கள பேச்­சாளர் இது தொடர்­பாக கூறு­கையில், 'பொலிஸ் உத்தியோகத்தராக இணைவதற்கான தனது விண்ணப் பத்தில் அவர் உண்மையானவராக இருந்தார்.

 

அத்துடன் இதற்கான உளவியல் சோதனையில் அவர் சித்தியடைந் தார். அவரின் விண்ணப்பம் அலபாமா மாநில பொலிஸ் தராதரங்க ளுக்கு அமைவாக இருந்தது' என்றார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.