Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
விருத்தசேதன (சுன்னத்து) சிகிச்சையின்போது விபத்து; 10 வயது சிறுவனின் ஆணுறுப்பை துண்டித்த மருத்துவர்
2016-12-29 14:12:01

10 வயதான சிறுவன் ஒருவனுக்கு விருத்த சேதனம் (சுன்னத்து) செய்வதற்கான சத்திரசிகிச்சையில் கோளாறு ஏற்பட்டதால் அச்சிறுவனின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் மலேஷியாவில் இடம்பெற்றுள்ளது.


தமான் சேரெஸ் உத்தமா எனும் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் மேற்படி சிறுவன் விருத்த சேதனத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். கடந்த 20 ஆம் திகதி அவ்வைத்தியசாலையில் இடம்பெற்ற சத்திரசிகிச்சையின்போது மருத்துவர்களின் தவறினால் அச்சிறுவனின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டதாக மலேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


சத்திரசிகிச்சை அறைக்க வெளியே காத்திருந்த சிறுவனின் தந்தையிடம், அச்சிறுவனின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட விடயம் தெரிவிக்கப்பட்டபோது அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார். மேற்படி சிறுவன் பின்னர் கோலாலம்பூரிலுள்ள கேபாங்சான் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு அவசரமாக அனுப்பப்பட்டான்.  ஆவ்வைத்தியசாலையிலுள்ள மருத்துவர்கள்  சிறுவனின் ஆணுறுப்பின் துண்டிக்கப்பட்ட இரு பாகங்களையும் வெற்றிகரமாக மீள ஒன்றிணைத்தனர்.


சிறுவனின் ஆணுறுப்பு எவ்வாறு துண்டிக்கப்பட்ட சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், மருத்துவரின் லேசர் கத்தி நழுவியதால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

 

மேற்படி மருத்துவரின் பெயர் வெளியிடப்படவில்லை. எனினும், அவர் பாகிஸ்தானில் மருத்துவ பட்டம் பெற்றவர் எனவும் 21 வருட கால அனுபவம் கொண்டவர் எனவும் மலேஷிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.  

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.