Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புத்­தளம் அல்­கா­சிமி சிட்டி வீட்டில் திரு­டு­வ­தற்கு நுழைந்த நபர் உறங்­கிய நிலையில் பிடி­பட்டார்
2017-01-02 11:48:48

(முஹம்மட் ரிபாக்)

 

புத்­தளம் அல்­கா­சிமி சிட்டி வீடு ஒன்­றுக்குள் திரு­டு­வ­தற்­காக நுழைந்த நபர் ஒருவர் கதி­ரையில் உறங்­கிய நிலையில் வீட்டு உரி­மை­யா­ள­ரினால் பிடிக்­கப்­பட்டு புத்­தளம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

 

மேற்­படி சந்­தேக நபரை எதிர்­வரும் 4ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு புத்­தளம் மாவட்ட பதில் நீதிவான் முஹம்­மது பசால் உத்­த­ர­விட்­டுள்ளார்.

 

இந்த சம்­பவம் பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது: கடந்த வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 5 மணி­ய­ளவில் குறித்த வீட்டின் உரி­மை­யாளர் சுபஹ் தொழு­கைக்­காக பள்­ளி­வா­ச­லுக்கு சென்று மீண்டும் வீட்­டிற்கு வந்தபோது, வீட்டின் முன் பகு­தி­யி­லி­ருந்த கதிரை ஒன்றில் அறி­மு­க­மில்­லாத ஒருவர் உறங்­கிய நிலையில் காணப்­பட்­டுள்ளார்.

 

இதன்போது குறித்த நபரை எழுப்பி விசா­ரித்தபோது, தான் கொழும்­பி­லி­ருந்து  ஒரு­வரைப் பார்க்க வந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

 

இத­னை­ய­டுத்து, அங்கு ஒன்றுகூடிய அந்த பிர­தேச மக்கள் குறித்த நபரை விசா­ரணை செய்­தனர். இதன்­போது முதலில் கொழும்­பி­லி­ருந்து வந்­த­தாக கூறி­யவர் பின்னர் கற்­பிட்­டி­யி­லி­ருந்து வந்­த­தாகக் கூறி­யுள்ளார்.

 

ஒன்­றுக்­கொன்று முர­ணான தக­வல்­களை தெரி­வித்த சந்­தேக நபரை மக்கள் நையப்­பு­டைத்தபோது, தனது பின்­ன­ணியில் குழு­வொன்று இருப்­ப­தா­கவும் தன்னை இந்தப் பகு­தியில் ஒருவர் முச்­சக்­கர வண்­டி யில் கொண்­டு­வந்து விட்டுச் சென்­ற­தா­கவும் கூறி­யுள்ளார். 

 

திரு­டு­வ­தற்­காக வந்த தான், போதை மாத்­திரை அதி­க­மாக பாவித்­த­மை­யினால் இந்த இடத்தில் உறங்கி விட்­ட­தா­கவும் சந்­தேக நபர் தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த நபர் புத்­தளம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

 

இவ்­வாறு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட சந்­தேக நபர் பொலிஸ் விசா­ர­ணையின் பின்னர் சனிக்­கி­ழமை புத்­தளம் மாவட்ட பதில் நீதிவான் முஹம்­மது பசால் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தியபோது எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.