Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக கை விலங்கிடப்பட்ட இளைஞன் நியூயோர்க் பொலிஸாரின் காரை 21 கிலோமீற்றர் தூரம் கடத்திச் சென்றான்
2017-01-04 14:26:46

மது­போ­தையில் வாகனம் செலுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட 18 வய­தான இளைஞன் ஒருவன், பொலி­ஸாரின் காரை கடத்திச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

 

 

நியூயோர்க் மாநி­லத்தில் புத்­தாண்டு தினத்­தன்று அதி­காலை இச்­ சம்­பவம் இடம்­பெற்­ற­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அதி­காலை 2 மணி­ய­ளவில் வீதிச் சோத­னை­யின்­போது கார் ஒன்றை மறித்து சோத­னை­யிட்ட நியூயோர்க் பொலிஸார், அக்­ காரின் சாரதி போதையில் இருப்­பதை அவ­தா­னித்து கைது செய்­தனர்.

 

அக்­ காரில் 13 வய­தான ஒரு­வரும் இருந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
வட கரோ­லினா மாநி­லத்தைச் சேர்ந்த டெகோட்டா லொக்­லியர் என 18 வய­தான இளை­ஞனே இவ்­வாறு கைது செய்­யப்­பட்டான்.

 

அந்த இளை­ஞ­னுக்குப் பொலிஸார் கைவி­லங்கு மாட்டி, பொலிஸ் கார் ஒன்றின் பின்­புற ஆசனத்தில் அமர வைத்­தனர். அந்த காரின் கத­வு­களை அடைத்­து­விட்டு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் ஏனைய வாக­னங்­களில் சோத­னை­களை மேற்­கொண்­டி­ருந்­த­பொது, மேற்­படி இளைஞன் காரின் முற்­புற ஆச­னத்­துக்கு நழுவிச் சென்று, அக்­ காரை செலுத்திச் செல்ல ஆரம்­பித்தான்.

 

கை வி­லங்­கி­டப்­பட்ட நபர் ஒருவர் தமது காரை கடத்திச் செல்­வதைக் கண்டு நியூயோர்க் பொலிஸார் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். சுமார் 20 கிலோ­ மீற்றர் தூரம் சென்­றபின் அவன் காரை ஓரி­டத்தில் நிறுத்­தி­விட்டு தப்பிச் சென்றான்.

 

பின்னர், ஜி.பி.எஸ். சாதனம் மூலம் அக்­ காரை பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர். அதி­காலை 4 மணி­யவில் டெகோட்டா லொக்­லியர் மீண்டும் கைது செய்யப் பட்டான். அவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.