Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சத்திரசிகிச்சையின போது தவறுதலாக வயிற்றுக்குள் விடப்பட்ட கத்திரிக்கோல் 18 வருடங்களின் பின் அகற்றப்பட்டது
2017-01-04 14:51:50

வியட்­நாமைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட சத்­தி­ர­சி­கிச்­சை­யின்­போது தவ­று­த­லாக வயிற்றின் உள்ளே வைக்­கப்­பட்­டி­ருந்த கத்­தி­ரிக்கோல் ஒன்றை 18 வரு­டங்­களின் பின்னர் மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர்.

 

தற்­போது 54 வய­தான மா வான் என்ஹாத் எனும் நபரின் வயிற்­றி­லி­ருந்தே இக்­கத்­தி­ரிக்கோல் அகற்­றப்­பட்­டது. தனது வயிற்­றுக்குள் கத்­தி­ரிக்கோல் இருப்­பதை இவர் 18 வரு­டங்­க­ளாக அறிந்­தி­ருக்க­ வில்லை. இவர் கடந்த மாதம் வாகன விபத்­தொன்றில் சிக்­கி­யபின் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் சிகிச்சை பெற்றார்.

 

(வைப்பகப்படம்)


 

மேற்­படி விபத்தில் மான் வான் என்­ஹாத்­துக்குப் பாரிய காயங்கள் ஏற்­ப­ட­வில்லை. ஆனால், அல்ட்­ரா­சவுன்ட் சோத­னை­களின்போது, அவரின் குட­லுக்கு அருகில் கத்­தி­ரிக்கோல் ஒன்று இருப்­பது தெரி­ய­வந்­தது.

 

அதை­ய­டுத்து, தாய் என்­குயென் மாகா­ணத்­த­ிலுள்ள வைத்­தி­ய­சா­லையில் கடந்த சனிக்­கி­ழமை அவ­ருக்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்டு மேற்­படி கத்­தி­ரிக்கோல் அகற்­றப்­பட்­டுது.

 

மான் வான் என்­ஹாத்தின் உடல்­நிலை ஸ்திர­மாக இருப்­ப­தா­கவும் அவர் தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யுள்ளார் எனவும் வைதி­ய­சா­லையின் பிரதிப் பணிப்­பா­ள­ரான டாக்டர் பி துக் ஓன்ஹ் தெரி­வித்­துள்ளார்.

 

1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்­கொள்­ளப்­பட்ட சத்­தி­ரசி­கிச்­சை­யின்­போது மேற்படி கத்­தி­ரிக்கோல் தவறு தலாக மான் வான் என்ஹாத்தின் வயிற் றுக்குள் வைகக்ப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப் படுகிறது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.